சட்டுன்னு குறைந்த ஏசி விலை.. பட்டுன்னு வாங்கிடுங்க, மிஸ் பண்ணிடாதீங்க

Written ByVijaya Lakshmi
Published: Apr 24, 2025, 11:46 AM IST|Updated: Apr 24, 2025, 11:46 AM IST

Air Conditioner Price Drop: கோடைக்காலம் தொடங்கிய நிலையில் தற்போது ஏர் கண்டிஷனர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், ஏசிகளில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

நம்மில் பலர் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் மலிவான ஏசிகளைத் தேடிக்கொண்டு இருப்போம். ஆனால் தற்போது டாடா குரோமாவில் ஏசிகளில் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. டாடா குரோமாவில் சம்மர் சேவிங் டேஸ் விற்பனை நடைபெற்று வருகிறது.

Summer Saving Days1/5

ஏர் கண்டிஷனர்கள் பாதி விலையில்

Summer Saving Days இல் பல ஏர் கண்டிஷனர்கள் பாதி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் எல்ஜி, மீடியா, வோல்டாஸ் ஆகிய ஏசிகளும் அடங்கும். இந்த ஏசிகளுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது நீங்கள் பாதிக்கும் பாதி விலையில் ஏசியை வாங்கலாம்.

 

LG 1.5 ton AC2/5

எல்ஜி 1.5 டன் ஏசி

LG 1.5 ton AC: இந்த ஏசி 2025 ஆம் ஆண்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஒரிஜினல் விலை ₹78,990 ஆகும், ஆனால் இதை குரோமாவில் ₹37,190க்கு வாங்கலாம். அதாவது நீங்கள் முழுமையாக 53% தள்ளுபடியைப் பெறுவீர்கள். மேலும் இது 3 நட்சத்திர மதிப்பீட்டோடு வருகிறது. அதனுடன் ICICI கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3500 தள்ளுபடி வழங்கப்படும்.

 

Voltas 1.3 ton AC3/5

வோல்டாஸ் 1.3 டன் ஏசி

Voltas 1.3 ton AC: டாடா குரோமாவில் வோல்டாஸ் 1.3 டன் ஏசிக்கு 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ₹71,276 ஆகும். ஆனால் இதை டாடா குரோமாவில் ₹ 35,990க்கு வாங்கலாம். இது 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ஏசி ஆகும்.

 

Midea 1.5 ton AC4/5

மீடியா 1.5 டன் ஏசி

Midea 1.5 ton AC: டாடா குரோமாவில் இந்த ஏசிக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 1.5 டன் ஏசியின் ஒரிஜினல் விலை ₹ 68,990 ஆகும், ஆனால் டாடா குரோமாவில் ₹ 33,890க்கு கிடைக்கிறது. இது 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ஏசி ஆகும்.

 

LG 1.5 ton AC5/5

எல்ஜி 1.5 டன் ஏசி

LG 1.5 ton AC: டாடா குரோமாவில் இந்த ஏசிக்கு 53% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ₹78,990 விலையில் உள்ள ஏசி, குரோமாவில் ₹37,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.