ACC U19 Asia Cup 2025: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே வீரர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
1/8ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் வரும் டிசம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த தொடர் 50 ஓவர் வடிவத்தில் நடைபெற இருக்கிறது.
2/8இதுவரை இந்த தொடரில் இந்தியா 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசி முறை இந்திய அணி இறுதிப்போட்டியில் வங்கதேச அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்ககது.
3/8வரும் U19 ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. ஆனால் இதுவரை 5 அணிகள் மட்டுமே இத்தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. இன்னும் 3 அணிகள் தகுதிபெறும்.
4/8அந்த வகையில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்னும் 2 அணிகள் இதில் இடம்பெறும். பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன, இன்னும் ஒரு அணிக்கு இங்கு வாய்ப்புள்ளது.
5/8ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும். டிசம்பர் 21ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.
6/8ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் U19 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடை இந்திய அணி அறிவித்துள்ளது. வரும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெறும் U19 உலகக் கோப்பை தொடருக்கு இது முன்னோட்டமாக இருக்கும்.
7/8இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே தேர்வாகி உள்ளார். மும்பை வீரரான இவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஓபனர் ஆவார். துணை கேப்டனாக விஹான் மல்ஹோத்ரா தேர்வு செய்யப்பட்டார். அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் டிசம்பர் 14இல் நடைபெறும்.
8/8U19 இந்திய அணி ஸ்குவாட்: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), யுவராஜ் கோஹில், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், நமன் புஷ்பக், டி. தீபேஷ், ஹெனில் படேல், கிஷன் குமார் சிங் (உடற்தகுதியை பொறுத்து தகுதிபெறுவார்), உத்தவ் மோகன், ஆரோன் ஜார்ஜ். காத்திருப்பு வீரர்கள்: ராகுல் குமார், ஹெம்சுதேஷன் ஜே, பி.கே. கிஷோர், ஆதித்யா ராவத்.