தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அரவிந்த் சாமியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. அவரின் மகன் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
90-களில், தென்னிந்திய சினிமாவின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்து, லட்சக்கணக்கான பெண் ரசிகைகளின் மனதை கொள்ளையடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி.
ரோஜா, பம்பாய் போன்ற படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவர், சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, மணிரத்னத்தின் கடல் திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்.
இருப்பினும், அவருக்கு ஒரு சரியான கம்பேக் படமாக அமைந்தது, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன் தான். அந்த படத்தில், சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் கதாபாத்திரத்தில், தனது ஸ்டைலான மற்றும் மிரட்டலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தில், அருள்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை நெகிழ வைத்தார்.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் அரவிந்த் சாமி, தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் ஊடக வெளிச்சத்திலிருந்து தள்ளியே வைத்திருப்பார். அவருக்கு ருத்ரா என்ற ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், அரவிந்த் சாமி தனது மகன் ருத்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்பாவைப் போலவே, மகன் ருத்ராவும் மிகவும் ஸ்டைலாகவும், அழகாகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.