Dhanush : சென்னை சாலிகிராமத்தில் உள்ள தான் படித்த பள்ளிக்கு நடிகர் தனுஷ் செய்துள்ள உதவி குறித்து தற்போது சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Dhanush : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்குபவர், தனுஷ். தமிழைத்தாண்டி பிற மொழிகளிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் தான் படித்த பள்ளிக்கு திரும்ப சென்றார். இவர் எதற்காக சென்றார்? அங்கு என்ன நடந்தது? இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5சென்னை சாலிகிராமத்தில் உள்ள 80 அடி சாலைல், தாய் சத்யா என்கிற பள்ளி அமைந்துள்ளது. இது தனுஷ் படித்த பள்ளியாகும். இங்கு தனுஷ் சென்றதோடு மட்டுமன்றி, அங்கு அவர் ஒரு பெரிய உதவியையும் செய்துள்ளார்.
2/5தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ எனும் திரைப்படத்தில் சமீப காலமாக நடித்து வருகிறார்.
3/5சமீபத்தில், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ரத்த தான நிகழ்ச்சியில் பேசிய அவருடைய பேச்சு, அரசியல் கலந்ததாக இருந்ததாக கருதப்பட்டது. இதையடுத்து, தனுஷ் என்ன செய்தாலும் அதை நோக்கியே மீடியாவின் கண்கள் இருக்கின்றன.
4/5தனுஷ் தற்போது செய்துள்ள விஷயமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர், தான் படித்த பள்ளிக்கு சென்றதோடு அங்கு தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார்.
5/5தனுஷ், தான் படித்த பள்ளிக்கு, சொந்த செலவில் புதிய கான்கிரீட் கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளார். இந்த கட்டடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.