ரஜினி கருப்பாக இருப்பதால்..ரிஜெக்ட் செய்த பெண்! அது யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Sep 13, 2025, 06:45 AM IST|Updated: Sep 13, 2025, 06:45 AM IST

Rajinikanth Rejected Because Of Dark Skin : தமிழ் திரையுலகின் ஸ்டைலிஸ்ட் சூப்பர் ஸ்டாராக இருப்பவர், ரஜினிகாந்த். இவர், கருப்பாக இருப்பதாக கூறி, ஒரு பெண் இவரை நிராகரித்தது உங்களுக்கு தெரியுமா?

Rajinikanth Rejected Because Of Dark Skin : கோலிவுட்டின் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாராக இருப்பவர், ரஜினிகாந்த். 70களை தாண்டியும் இன்னும், அதே துள்ளல், அதே ஸ்டைலுடன் தன் படங்களால் ரசிகர்களின் மனங்களில் குடிகொண்டு வருகிறார். இவர், ஆரம்ப காலத்தில் சினிமாவில் வளர்ச்சி பெற, அவரது விடாமுயற்சி பெரிய காரணம். அதைவிட பெரிய காரணம், அவரது ஈகோ. இதை தூண்டிவிட்டவர்கள், அவரது நிறத்தை கேலி செய்தவர்கள். அந்த வரிசையில் வந்த ஒரு பெண், ரஜினி கருப்பாக இருந்ததற்காக அவரை வேண்டாமென சொல்லி விட்டாராம்.

Rajinikanth1/7

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் கூலி படத்தில் நடித்திருந்தார். இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். 70களை தாண்டியும், இன்னும் டாப் ஹீரோவாக இவர் ஜொலிக்க காரணம், அவரது ரசிகர் கூட்டமும் மாறாத அவரது அதே ஸ்டைலும்தான்.

Young Age2/7

இளமைக்காலம்

ரஜினிகாந்த், எந்தவித சினிமா பின்னணியும் இன்றி சினிமாவிற்குள் வந்தவர். பெங்களூருவில் சிவாஜி ராவ்-ஆக பிறந்த இவர், கண்டிப்பான தந்தையால் வளர்க்கப்பட்டார். இளமைக்காலத்தில் இவரை விட, அவரது உடன் பிறந்தவர்கள் நல்ல நிலையில் இருந்ததால், இவருக்கு பாடம் புகட்ட வேண்டுமென அவரது அப்பா கூலி வேலைக்கு அனுப்பினாராம்.

Superstar3/7

சூப்பர் ஸ்டார்

கூலி வேலைக்கு பின்பாக சில காலம், பஸ் கண்டக்டராக வேலை பார்த்தார், ரஜினிகாந்த். அதன் பிறகு இன்றைய சென்னை-அன்றைய மெட்ராஸிற்கு வந்து, மெட்ராஸ் திரைப்பட பயிற்சி கல்லூரியில் சேர்ந்து, ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்தார். இது, அவரை பெரிய இடத்திற்கு கொண்டு சென்றது. 

Before Cinema4/7

சினிமாவிற்கு முன்

ரஜினிகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் பெங்களூருவில் இருந்த போது, இரண்டு பெண்கள் மீது காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, “The Name Is Rajinikanth" எனும் புத்தகத்தை காயத்ரி ஸ்ரீகாந்த் என்கிற பெண் எழுதினார். அவர், ஒரு நேர்காணலில் இது குறித்து பேசியிருந்தார்.

Rajinikanth Love5/7

ரஜினியின் காதல்

ரஜினி, 2 பெண்கள் மீது காதல் வயப்பட்டாராம். முதல் பெண் மீது இருந்தது ஒரு ஈர்ப்பாகவே முடிந்து விட்டதாம். இரண்டாவது பெண் மீது மிகுந்த காதல் கொண்ட ரஜினிகாந்த், அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தாராம்.

Rejection6/7

நிராகரித்த பெண்

ரஜினிகாந்த், அந்த பெண்ணின் வீட்டிற்கு, பெண் பார்க்கும் படலத்திற்கு சென்ற போது, அந்த பெண், அவர் பார்க்க கருப்பாக ரவுடி போல இருப்பதாக கூறி, நிராகரித்து விட்டாராம். ஆனால், இது ரஜினிகாந்தின் சுய மரியாதையை ஒரு போதும் பாதிக்கவில்லை. காரணம், அந்த பெண் தன்னை நிராகரித்த காரணத்தையே வைத்துக்கொண்டு, “இந்த கருப்பு தோலை வைத்து ஜெயித்து காட்டுகிறேன் பார்” என்று மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டாராம்.

Latha Rajinikanth7/7

மனைவி லதாவுடன்

ரஜினி, பின்னாலில் லதாவை திருமணம் செய்து கொண்டு இரு மகள்களுக்கும் தந்தையானார்.“சிவப்பாக இருந்தால்தான் நடிகராக முடியும்” என்கிற எழுதப்படாத விதிமுறையை உடைத்தவர், ரஜினிகாந்த்தான். அவர், இப்போது வரை டாப் இடத்தில் இருக்க காரணம், அவர் மனதில் இருக்கும் துடிப்பு, தன்னை பற்றி உயர்வாக நினைக்கும் எண்ணமும்தான். 

(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி, இணைய தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லை, இது, காயத்ர்சி ஸ்ரீநாத்தின் கருத்து தானே தவிர ZEE MEDIA-வுடையது இல்லை. இதற்கு எமது நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பது குறிப்பிடத்தக்கது.)