Rajinikanth Written Films : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில படங்களுக்கு திரைக்கதை எழுதி, அதை தயாரித்து, நடிக்கவும் செய்திருக்கிறார். அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
Rajinikanth Written Films : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இவர், சில படங்களுக்கு திரைக்கதை எழுதியும் இருக்கிறார், அதில் அவரே நடித்து-தயாரித்தும் இருக்கிறார். அந்த படங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய பிரபலங்களுள் ஒருவராக இருக்கிறார், ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்த ‘கூலி’ திரைப்படம் வெளியாகி, மக்களின் வரவேற்பை பெற்றது.
தமிழ் திரையுலகின் ஹிட் ஹீரோக்களுள் ஒருவராக வலம் வரும் ரஜினிகாந்த், இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.
ரஜினிகாந்த், நடிகர் மட்டுமல்ல சில சமயங்களில் திரைக்கதை எழுத்தாளராகவும், சில சமயங்களில் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
ரஜினிகாந்த், தனது இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் சில படங்களுக்கு மட்டுமே திரைக்கதை எழுதி இருக்கிறார். ஆனால், அந்த படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.
அவர் அப்படி திரைக்கதை எழுதிய படங்களுள் ஒன்று, பாபா. இந்த படம், 2002ஆம் ஆண்டு வெளியானது. இதனை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கோபு பாபு மற்றும் இணைந்து வசனம் எழுதினர். மற்றபடி, திரைக்கதை, கதை எழுதியது ரஜினிகாந்த்தான். இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார்.
ரஜினிகாந்த் முதன்முதலாக திரைக்கதை எழுதிய படத்தின் பெயர், வள்ளி. இந்த படத்தில் அவர் கேமியோ ரோலிலும் நடித்திருப்பார். இந்த படம், 1993ஆம் ஆண்டு வெளியானது. இதற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பிரியா ராமன்தான் இதில் முக்கிய கதாப்பாத்திரம்.
வள்ளி-பாபா ஆகிய இரண்டு படங்களுமே, ரஜினிக்கு பெரிதாக ஹிட் கொடுக்காத படங்களாகும். இதிலிருந்து அவர் திரைக்கதை எழுதுவதையே நிறுத்திவிட்டார்.