‘மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..’ ரவி மோகன் பரபரப்பு பேச்சு!

Written ByYuvashree
Published: Jul 07, 2026, 06:37 PM IST|Updated: Jul 07, 2026, 06:37 PM IST

தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருந்தவர் ரவி மோகன். இவர், சமீபத்தில் ஒரு பெரிய விருது விழாவில் கலந்து கொண்டதோடு ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Ravi Mohan1/5

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் வாழ்வில், கடந்த 2 வருடங்களாக பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. முதலில், மனைவி ஆர்த்தி உடனான பிரிவு, பின்னர் தோழி கெனிஷா உடனான பிரிவு, அதன் பிறகு ஒரு எமோஷனலான பிரஸ் மீட் என்று இவர் ரசிகர்களை அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்களை செய்து வந்தார்.

 

Press Meet2/5

செய்தியாளர் சந்திப்பு

கெனிஷா, தான் ரவி மோகனை விட்டு பிரிவதாக பதிவிட்டதற்கு மறு நாள், ரவி மோகன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில், தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், தான் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவை செய்து கையை அறுத்துக்கொள்ளும் முயற்சிகளை செய்ததகாவும் தெரிவித்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Life3/5

வாழ்க்கை

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் ரவி மோகன் பேசினார். அப்போது, தான் செய்த அந்த சிறிய தவறு ரசிகர்களை காயப்படுத்தியதாகவும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும், 50-50 என பார்க்கும் போது தான் எமோஷனல் ஆகி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

 

Fans4/5

ரசிகர்கள்

இதற்கு பிறகு மக்கள் கொடுத்த அன்பு தன்னை நெகிழ வைத்ததாகவும், அவர்கள் சொல்வதை தான் வேதவாக்காக எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். மேலும், அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்த அவர், சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன் என தெரிவித்தார்.

New Life5/5

புது வாழ்க்கை

தொடர்ந்து, தான் திரும்பி வந்து கொண்டே இருக்கிறேன் என கூறிய அவர் தனக்கு நம்பிக்கை கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு கராத்தே பாபுவாக தான் கண்டிப்பாக திரும்பி வருவேன் எனவும் இனிமேல் தவறு நடக்காது என்றும், மக்களின் ஆசிர்வாதத்தால் புது வாழ்க்கை தொடரும் என்றும் பேசியிருக்கிறார்.