ஆர்த்தி ரவி பகிர்ந்த புகைப்படங்கள்! கேப்ஷன்ல யாரையோ மறைமுகமா சொல்றாங்களே..

Aarti Ravi Sons Photos : பிரபல நடிகர் ரவி மோகனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஆர்த்தி, தற்போது தான் தனது மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Aarti Ravi Sons Photos : பிரபல நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, ஆகஸ்டில் எடுத்திருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். இதில் கேப்ஷனில் அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /7

ரவி மோகனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஆர்த்தி, அவ்வப்போது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். ரவி மோகன், தன் தோழி கெனிஷாவுடன் வெளியில் அனைத்து விழாக்களுக்கும் செல்கிறார்.

2 /7

சமீபத்தில் ரவி மோகன் தன் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதன் விழாவில் அவர் கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இது பேசுபொருளானது.

3 /7

ரவி மோகன் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தி ஆகஸ்ட் மாதம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர் தன் மகன்களுடன் நேரம் செலவிடும் தருணங்களை பதிவிட்டு இருக்கிறார்.

4 /7

ரவி மோகன்-ஆர்த்திக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இப்போது ஆர்த்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

5 /7

ஆர்த்தி கேப்ஷனில், “மேடையில் நடப்பதெல்லாம் உண்மையல்ல..” என்பது போல தன் கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த பலர் இவர் யாரையோ குறிப்பிட்டு பேசுகிறாரோ என்று கூறி வருகின்றனர்.

6 /7

ஆர்த்தி ரவியின் குடும்பத்தார் தன்னை மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புருத்தியதாக ரவி மோகன் கூற, இவர்களின் விவாகரத்து வழக்கு மிகுந்த மீடியா கவனம் பெற்றது. 

7 /7

நீதிபதிகள், தொடர்ந்து இருவரும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று கூறவே, இருவரும் இப்போது எதுவும் பேசமால் இருக்கின்றனர். இதையடுத்து, ஆர்த்தியின் இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.