Robo Shankar Daughter Indraja Post : நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்து 3 நாட்கள் ஆகி விட்டது. இதையடுத்து, அவரது மகள் இந்திரஜா வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Robo Shankar Daughter Indraja Post : பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல் பாகங்கள் செயலிழந்தது காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பாக உயிரிழந்தார். இவரது மகள் இந்திரஜா, அவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டு, அவருக்கான எமோஷனல் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
1/7தன் கடின உழைப்பால், சின்னத்திரை மேடைக்கு வந்து, அதன் மூலம் பெரிய திரைக்கு சென்றவர், ரோபோ சங்கர். இவரது குடும்பத்திற்கு பெரிய தூணாக இருந்தவர் இவர்.
2/7ரோபோ சங்கர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், உடல் எடை குறைந்து-மெலிந்து போய் விட்டார்.
3/7ரோபோ சங்கர், உடல் நிலை சற்று தேரியிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவர், உடல் பாகங்கள் செயலிழந்ததால் உயிரிழந்து விட்டார்.
4/7ரோபோ சங்கர், உடல் எடை மெலிந்து சரியான நிலையில், மீண்டும் இப்படி திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் உயிரிழந்தது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
5/7ரோபோ சங்கர், கடந்த 18ஆம் தேதி உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் திரையுலகினரும் வந்திருந்தனர்.
6/7ரோபோ சங்கரின் இறுதி அஞ்சலியில் நடந்த சம்பவங்கள், இப்போதும் பேசு பொருளாக இருக்கின்றன. இந்த நிலையில், அவரது மகள் இந்திரஜா தன் அப்பாவிற்காக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
7/7இந்திரஜா, தனது தந்தை குறித்து எமோஷனல் ஆக வெளியிட்டிருக்கும் பதிவில், அவரை ரொம்பவும் மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். “நீங்கள் போய் 3 நாட்கள் ஆகி விட்டது, இந்த 3 நாட்கள் எனக்கு உலகமே ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்லி கொடுத்தது போல பலமாக இருப்பேன். பயப்பட மாட்டேன். உங்கள் மகள் என்கிற பெயரை காப்பாற்றுவேன். உங்களுக்கும் எனக்கும் ரொம்ப பிடித்த போட்டோ இது. இதை பார்ப்பவர்கள் நான் உங்களுடைய ஜெராக்ஸ் போல இருப்பதாக கூறுவார்கள். நான் எப்போதும் உங்களை போலவே இருப்பேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.