Actor Robo Shankar Old Photos : பிரபல நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் காலமானர். இதையடுத்து, இவரது பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Robo Shankar Old Photos : பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உயிரிழந்தார். உடல் பாகங்கள் செயலிழந்தது காரணமாக, அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவற்றை இங்கு பார்ப்போம்.
1/7நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உயிரிழந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. அதில், உடல் இளைத்து உருகுலைந்து போய் விட்டார்.
2/7ரோபோ சங்கர், தனது சொந்த திறமையால் சினிமாவில் உயர்ந்தவர். முதலில், திரைக்கு பின்னால் இருந்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக நகைச்சுவை நடிகராக மாறினார்.
3/7ரோபோ சங்கர், பிரியங்காவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்திரஜா என்கிற பெண் குழந்தை பிறந்தார்.
4/7ரோபோ சங்கரின் குடும்பமே, மீடியா குடும்பமாக இருக்கிறது. இவரது மகளும் மருமகனும் இன்ஸ்டா இன்ஃப்ளுவன்ஸராக இருக்கின்றனர்.
5/7ரோபோ சங்கர் இளம் வயதில் பாடி பில்டராகவும் இருந்தார். இவர் ஸ்டேஜ் ஏறும் போது, உடலில் பெயிண்ட் பூசிக்கொண்டு ஏறுவாராம். அதை அழிக்க, மண்ணெண்ணை உபயோகிக்க வேண்டுமாம். இதனால், அவர் தோல் வலுவிழந்து இப்போது நோய் வாய்ப்பட்டதாக நடிகர் இளவரசு தெரிவித்திருந்தார்.
6/7நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நட்சத்திரன் என்று பெயர் வைத்தனர். இந்த குழந்தைக்கு சமீபத்தில் காதணி விழா நடக்க இருந்தது. ஆனால், அதற்குள் ரோபோ சங்கர் இறந்து விட்டார்.
7/7ரோபோ சங்கரின் இறப்பிற்கு, திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். இவரது குடும்பத்தினரை, எப்போதும் மகிழ்ச்சியாக பார்த்த சிலர், இப்போது இவர்களை பார்க்க கஷ்டமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.