ரோபோ சங்கரின் வாழ்க்கை பயணம்! திரைக்கு பின்னால் இருந்தவர்-முன்னாள் வந்தது எப்படி?

Written ByThirishala S.P
Published: Sep 20, 2025, 12:58 PM IST|Updated: Sep 20, 2025, 12:58 PM IST

Life Of Comedian Robo Shankar: தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், தனது தனித்துவமான ரோபோ நடனத்தாலும், mimicry திறனாலும் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால், அவரது வாழ்க்கை சாதாரணமாக இருந்ததா?

Life Of Comedian Robo Shankar: 46 வயதில் திடீரென மரணமடைந்த ரோபோ சங்கர், மரணத்திற்கு காரணமாக மது பழக்கம் மட்டுமா? அவர் bodybuilding மற்றும் robot dance வேடங்களில் போட்ட ரசாயனமும் பாதிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது!

Life of robo shankar 1/10

ஆரம்ப வாழ்க்கை:

ஆரம்ப வாழ்க்கை: ரோபோ சங்கர், 1978 டிசம்பர் 24-ம் தேதி மதுரையில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அவர் நடனம், mimicry, நகைச்சுவை, நடிப்பு ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். நண்பர்களையும் குடும்பத்தினரையும் சிரிக்க வைப்பது அவரின் இயல்பு. பள்ளி, கல்லூரி நாட்களில் மேடையே அவரது உலகம். அவர் “ரோபோ” என அழைக்கப்பட்டதற்குக் காரணம், ரோபோ போல் நடனமாடும் திறமை கொண்டு அடிக்கடி ரோபோ போல் வேஷம் அணிந்து நடித்தது மட்டுமே.

College 2/10

கல்லூரி நாட்கள்:

கல்லூரி நாட்கள்: சங்கர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் (MA Economics) படித்தார். கல்லூரி காலத்தில் மேடைகளில் mimicry, robot dance செய்து புகழ்பெற்றார். சிறிய கிராம விழாக்களிலிருந்து பெரிய நிகழ்ச்சிகளுக்கு வரையிலும் சிரிப்பை பரப்பியவர். இதுவே பின்னர் அவரை தொலைக்காட்சி மற்றும் சினிமா உலகுக்கு தள்ளிச் சென்றது.

 

Television 3/10

தொலைக்காட்சி பயணம்:

தொலைக்காட்சி பயணம்: அவரின் புகழ் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. Kalakka Povadhu Yaaru? போன்ற நிகழ்ச்சிகளில் அவர் காட்டிய timing, energy, நகைச்சுவை punch ஆகியவை ரசிகர்களை கவர்ந்தன. இவர் ordinary mimicry artist அல்ல, தன்னுடைய style-ஐ உருவாக்கியவர். அந்த மேடை அவருக்கு சினிமா உலகிற்கான கதவைத் திறந்தது.

Cinema 4/10

சினிமா உலகில் உயர்வு:

சினிமா உலகில் உயர்வு: சங்கர் முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். Idharkuthane Aasaipattai Balakumara படத்தில் அவர் காட்டிய நகைச்சுவை திருப்பம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் Vaayai Moodi Pesavum, Maari, Maari 2, Irumbu Thirai, Velaikkaran, Viswasam போன்ற ஹிட் படங்களில் நடித்தார். அவர் நடித்த காட்சிகள் குறுகியதாக இருந்தாலும், ரசிகர்கள் சிரிப்பில் மூழ்க வைத்தார்.

 

Mimicry 5/10

சிறப்பு திறன்கள், குரல் நடிப்பு:

சிறப்பு திறன்கள், குரல் நடிப்பு: ரோபோ சங்கர் நகைச்சுவையிலேயே அல்லாமல், குரல் நடிப்பிலும் தன்னை நிரூபித்தார். 2019ல் வெளியான The Lion King படத்தில் “பும்பா (Pumbaa)” கதாபாத்திரத்துக்கு தமிழ் குரல் கொடுத்தார். 2024ல் Mufasa: The Lion King படத்திலும் அதே கதாபாத்திரத்தில் குரல் கொடுத்தார். இவரது குரல் ரசிகர்களால் தனியே நினைவில் வைக்கப்பட்டது. இதற்குக் காரணம், அவர் மிமிக்கிரியில் சிறந்து விளங்கியதுதான்.

Body builder 6/10

பாடி பில்டர்:

பாடி பில்டர்: ரோபோ சங்கர் தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறனுடன் மட்டுமல்ல, உடல் கட்டமைப்பில் (bodybuilding) ஈடுபட்டார். பல வருடங்கள் கடுமையான உடற்பயிற்சிகள், strict diet மற்றும் gym பயிற்சிகளை தொடர்ந்து, தன்னுடைய உடலை மேம்படுத்தினார். சிறப்பு காட்டிய ரோபோட் நடனம், சில்வர் பைண்ட் உடை போன்ற காட்சிகளுக்கு அவர் உடல் கட்டமைப்பு முக்கிய பங்கு வகித்தது, இது அவரது தனித்துவமான மேடைக் காட்சிகளை உருவாக்கியது.

Family 7/10

குடும்பம்:

குடும்பம்: சங்கரின் மனைவி பிரையங்கா சங்கர். இவர்களின் மகள் இந்திரஜா சங்கர், விஜய் நடித்த Bigil படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்தார். குடும்பத்தோடு நெருக்கமாக இருந்த ரோபோ சங்கர், வேலை பிஸியாக இருந்தாலும் குடும்பத்திற்கு எப்போதும் நேரம் ஒதுக்குவார். தனது மகளின் வளர்ச்சியில் பெருமை கொண்டார். மகளின் திருமணத்தையும், சமீபத்தில் முடித்த நிலையில் அவருக்கு ஒரு குழைந்தயும் உள்ளது.

Medical issues 8/10

உடல்நல சவால்கள:

உடல்நல சவால்கள: வாழ்க்கையில் அவர் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் என்றாலும், சில சவால்களை எதிர்கொண்டார். குறிப்பாக மது பழக்கம் காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன, கல்லீரல் பிரச்சினைகள் மற்றும் உடல் எடையில் குறைவு போன்ற சிக்கல்கள் வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு ரோபோ சங்கருக்கு jaundice ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையால் உடல் எடையும் அதிகமாக குறைந்தது. பின்னர் அவர் தானே பேட்டிகளில், உணவு முறையின்மையும், அதிக வேலைச்சுமையும், மது பழக்கத்துடனான சிரமங்களும் காரணம் என்று பகிர்ந்தார். நடிகர் தனுஷ் உள்ளிட்டவர்கள் அவருக்கு மன உறுதியை கொடுத்தனர்.

Death 9/10

திடீர் மறைவு:

திடீர் மறைவு: 2025 செப்டம்பர் 16ல் படப்பிடிப்பு நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே சென்னை GEM மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்களின் தகவலின்படி, அவருக்கு “massive gastrointestinal bleed” ஏற்பட்டதாக கூறினர். பின்னர் பல உறுப்புகள் செயலிழந்து (multi-organ failure) நிலை மோசமடைந்தது. 2025 செப்டம்பர் 18 இரவு 9:05 மணிக்கு அவர் உயிரிழந்தார். வயது வெறும் 46 தான். தற்போது, அவரது மரணத்திற்கு வெறும் மது பழக்கம் தான் காரணம் அல்ல; சிலர் கூறுவது, அவர் ‘பாடி பில்டர்’ நிலையில் சில்வர் பைண்ட் மற்றும் ரோபோட் வேடம் அணிந்த போது ஏற்படும் உடல் அழுத்தமும் பாதிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.

Pray10/10

அஞ்சலி:

அஞ்சலி: ரோபோ சங்கரின் மறைவு தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்தது. கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் ஆண்டனி, எம்.எஸ். பாஸ்கர், ராதா ரவி, நஞ்சில் விஜயன், கோட்டாச்சி, நளினி, தமு, ராமு, பாடகர் மனோ, பாடலாசிரியர் ஸ்நேகன் மற்றும் சிறு திரை நடிகர்கள் பாரத் உள்ளிட்டோர் முக்கியமாக பங்கேற்றனர். அவரது நகைச்சுவை, தனித்துவமான robot dance, ரசிகர்களின் இதயத்தில் என்றும் நிலைத்து நிற்கும். குறுகிய வாழ்க்கை, ஆனால் நீண்ட நினைவுகளை விட்டுச் சென்றவர் ரோபோ சங்கர்.