Shah Rukh Khan Refused Jailer 2 : பிரபல நடிகர் ஒருவர், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Shah Rukh Khan Refused Jailer 2 : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், ஜெயிலர் 2. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இதில் நடிப்பார் என ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ஒருவர் தற்போது அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம், ஜெயிலர் 2. இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் முக்கிய நடிகராக விளங்குபவர், ஷாருக்கான். இவருக்கு ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட பிரியம் உள்ளது. இதன் காரணமாகத்தான் தான் நடித்த ரா 1 மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்தை கௌரவம் செய்யும் வகையில் காட்சிகளையும், பாடலையும் வைத்திருப்பார்.
ஷாருக்கானை ஜெயிலர் 2வில் நடிக்க வைக்க பல நாட்களாக பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றதாக கூறப்பட்டது. இதற்காக, ஷாருக்கான் கேமியோ கதாப்பாத்திரம் குறித்த கதையை நெல்சன் அவரிடம் கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், கதையை கேட்ட அவர் நடிக்க விருப்பமில்லை என தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஷாருக்கான், தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும், ஒரு படத்தில் சும்மா இரண்டு காட்சிகள் வந்து செல்லும் கேமியோ கேரக்டர்களில் நடிக்க கூடாது என அவர் தீர்க்கமாக முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட விருப்பம் இருந்தாலும் தானும் பெரிய நடிகர் என்பதால், இப்படி இன்னொரு சூப்பர் ஸ்டாரின் படத்தில் சின்ன ரோலில் நடிக்க விரும்பாததால் அவர் இதனை வேண்டாம் என சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தில், ஷாருக்கானின் கேரக்டரை ரஜினிக்கு நண்பராக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து படத்தில் இன்னும் அந்த கதாப்பாத்திரம் வைக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பது தெரியவில்லை.
ஜெயிலர் படத்தில் நடித்த மோகன் லால், அதன் ஜெயிலர் 2 பாகத்திலும் தொடர்ந்து அதே கேரக்டரில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது.