திருமலை படத்தின் முதல் கதாநாயகி இந்த நடிகரின் மனைவியா? யார் தெரியுமா?

Written ByThirishala S.P
Published: Sep 25, 2025, 11:54 AM IST|Updated: Sep 25, 2025, 11:54 AM IST

Thirumalai movie Heroine Change: படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் திடீரென கதாநாயகி மாறினாரா?! அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் நடந்தது...

Thirumalai movie Heroine Change: விஜய் நடிப்பில் வெளியான அந்த சூப்பர்ஹிட் படம் இன்று வரையும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. திரையுலகில் பெரும் திருப்புமுனை கொடுத்த அந்த படத்துக்குப் பின்னாலான கதை அதிர்ச்சி தரும் வகையில் இருக்கிறது.

Thirumalai 1/7

திருமலை படம்

திருமலை படம்  2003-ல் வெளியான விஜய் நடிப்பில் ரமணா இயக்கத்தில், கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரித்த திருமலை, விஜயின் கேரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

Actress2/7

நாயகி தேர்வு

நாயகி தேர்வு முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் நம்ரதா ஷிரோத்கர். இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி. பல மொழிகளில் நடித்த முன்னாள் நடிகை.

 

Namradha 3/7

நம்ரதாவின் பங்கு

நம்ரதாவின் பங்கு நம்ரதா ஷிரோத்கர், ஜோதிகா நடித்த பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு தொடங்கி, 50% காட்சிகள் அவர் நடித்தே முடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Reason 4/7

மாற்றப்பட்ட காரணம்

மாற்றப்பட்ட காரணம் இயக்குநர் ரமணா, நம்ரதாவின் நடிப்பில் திருப்தி அடையவில்லை என்று செய்திகள் வெளிவந்தன. அதனால் அவரை நீக்கி, ஜோதிகாவை நாயகியாக நடிக்க வைத்தனர்.

Jyothika5/7

ஜோதிகாவின் வருகை

ஜோதிகாவின் வருகை ஜோதிகா கதாநாயகியாக வந்த பின், படத்தின் கதைநாயகி வேடம் வலிமையான திருப்பத்தை பெற்றது. படம் முழுமையடைந்து, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

Success 6/7

படம் வெற்றி

படம் வெற்றி திருமலை விஜயின் கேரியரில் மிகப்பெரிய மாறுபாடு கொண்டு வந்தது. ரொமான்ஸ் ஹீரோவாக இருந்து, ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய முக்கிய படம் இது. திருமலை திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

24 October 2003:7/7

24 அக்டோபர் 2003:

24 அக்டோபர் 2003 அடுத்த மாதம் 21 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், திருமலை படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.