விஜய் நடித்த 10 ரீ-மேக் படங்கள்! எல்லாமே சூப்பர் ஹிட்..முழு லிஸ்ட்

Vijay Super Hit Remake Films : விஜய், தனது சினிமா கெரியரில் பல ரீ-மேக் படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்கள் என்னென்ன தெரியுமா?

Vijay Super Hit Remake Films : தமிழ் சினிமாவில், பல ரீ-மேக் படங்களில் நடித்த ஒரே நடிகராக இருக்கிறார் விஜய். விரைவில் ஜனநாயகன் படத்துடன் முழுக்கு போட இருக்கும் இவர், தன் சினிமா கெரியரில் பல ரீ-மேக் படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்கள் பல பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அந்த படங்கள் எது தெரியுமா?

1 /10

அனைத்தி பரவு எனும் மலையாள படம், காதலுக்கு மரியாதை எனும் பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்துள்ளார். இப்படம், விஜய் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படமாகும்.  

2 /10

தேவையாணி, விஜய், சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்த படம் ப்ரண்ட்ஸ். இந்த படம் மலையாளத்தில் Friends என்கிற பெயரில் வெளியானது. இதன் தமிழ் ரீ-மேக்கில்தான் விஜய் நடித்திருந்தார். 

3 /10

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்திருந்த ‘தம்முடு’ படம் ‘பத்ரி’ என்கிற பெயரில் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டது. இதில் விஜய்-பூமிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

4 /10

தமிழில் விஜய் நடித்திருந்த படம், யூத். இந்த படம் தெலுங்கில் சிரு நுவ்வாதோ என்கிற பெயரில் வெளியாகியிருந்தது. இப்படம், மக்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது. 

5 /10

நுவ்வு நாக்கு நாச்சாவ் என்கிற தெலுங்கு படம், தமிழில் வசீகரா என்கிற பெயரில் வெளியானது. இதில் விஜய்-சினேகா நடித்திருந்தனர். 

6 /10

தெலுங்கில் ஒக்கடு என்கிற பெயரில் வெளியான படம், தமிழில் ‘கில்லி’ என்கிற பெயரில் எடுக்கப்பட்டது. இதில் விஜய்-த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். பிரகாஷ் ராஜ் வில்லனாக வந்தார். 

7 /10

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த படம், அதானோகடே. இந்த படத்தின் தமிழ் ரீ-மேக் ஆதி என்கிற பெயர் வெளியானது. இதிலும் விஜய்-த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். விஜய் நடித்த ரீ-மேக் படங்களிலேயே ஓடாத படம் இது ஒன்றுதான். 

8 /10

தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் தமிழ் ரீ-மேக்கில் விஜய், ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். 

9 /10

மலையாளத்தில் வெளியான படம், ‘பாடிகார்ட்’. இந்த படம், காவலன் என்கிற பெயரில் தமிழில் வெளியானது. இதில் அவர் அசினுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

10 /10

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த படம், நண்பன். இந்த படத்தை சங்கர் இயக்கியிருந்தார். இது, இந்தியில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தின் கதையாகும்.