மூக்கில் ட்யூப்புடன் காஜல் அகர்வால்! எதற்காக சிகிச்சை? வைரலாகும் போட்டோ..

Kajal Aggarwal Viral Photo : தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், காஜல் அகர்வால். இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Aggarwal Viral Photo : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், காஜல் அகர்வால். தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர், சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதிலிருந்து இவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் பலரும் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

1 /7

காஜல் அகர்வால், 2009ல் வெளியான மகதீரா படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இதனால், இவரது மார்கெட் பெரிதாக உயர்ந்தது. இவருக்கு தமிழ் திரையுலகில் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. 

2 /7

தென்னிந்திய நடிகைகளுள், பிரபலமாக விளங்கும் காஜல் அகர்வால், பெரும்பாலும் தெலுங்கு படங்களில்தான் நடித்திருக்கிறார். இவரது தங்கை நிஷாவும் திரையுலகிற்குள் நுழைந்தார். ஆனால், அவருக்கு திரையுலகம் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. 

3 /7

டாப் நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், தமிழில் விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். அதே போல, தெலுங்கிலும் ராம் சரண், பிரபாஸ் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். 

4 /7

காஜல் அகர்வா, 2020ஆம் ஆண்டில் கௌதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. 

5 /7

ஒரு பக்கம் குடும்பம், ஒரு பக்கம் சினிமா என்று இருக்கும் காஜல் அகர்வால், தற்போது பெரிதாக சினிமாவில் ஆக்டிவாக இல்லை. இருப்பினும், தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளை தவிர்க்காமல் நடித்து வருகிறார். காஜல், கடைசியாக இந்தியன் 2 படத்தில் கொஞ்ச நேரம் வரும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தியன் 3 படத்தில் இவர்தான் கதாநாயகி.

6 /7

காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், அவரை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என்று கேட்டு வருகின்றனர்.

7 /7

காஜல் அகர்வால், இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் மூக்கில் ட்யூப், கையில் ட்ரிப்ஸ் என்றிருந்தார். இது  டீ-ஏஜிங் சிகிச்சை என்று கூறப்படுகிறது. இதனை சில பிரபலங்கள் அவ்வப்போது செய்வது வழக்கம். காஜல் அகர்வாலும், தீபாவளி சமயத்தில் தன்னை மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த சிகிச்சயை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.