Actress Kangana Ranaut Slams AR Rahman : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கங்கனா ரனாவத் அவருக்கு எதிராக கூறியிருக்கும் கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Actress Kangana Ranaut Slams AR Rahman : ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் பிபிசி சேனலுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் அவர் ரோஜா படத்தில் இசையமைத்ததில் இருந்து, ஆஸ்கார் விருது பெற்றவரை பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில், அவர் கூறிய சில கருத்துகள், எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது. இதையடுத்து கங்கனா ரனாவத் ஓபனாக அவருக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் பிபிசி சேனலுக்கு நேர்கானல் கொடுத்திருந்தார். அதில் அவரிடம் பாலிவுட்டில் இத்தனை நாட்களாக இருந்தாலும், ஏன் வெளியாள் போல பார்க்கப்படுக்கிரீர்கள் என்பது போன்ற சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் இந்தி மொழி பேசியதே இல்லை என்பதுதான் இதற்கு காரணமாக இருக்கும் என்று கூறினார்.
பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பாகுபாடு இருக்கிறதா என்கிற கேள்விக்கு, “கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம், அதிகார மாற்றம் நடந்ததால் இது ஏற்பட்டிருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது” என்றார்.
தான் இசையமைத்த சவ்வா படம் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், அது மக்களை பிளவுப்படுத்தும் படம்தான் என்றும், அதை வைத்து தான் பணம் சம்பாதித்தாக நினைத்ததாகவும் பேசினார். இருப்பினும், அப்படத்தின் மையக்கருத்தாக வீரம் இருந்ததாகவும், இந்த படத்திற்கு நீங்கள் மட்டும்தான் தேவை என்று படத்தின் இயக்குநர் கூறியதால் தான் இதற்கு இசையமைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். ”ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரைப்பட துறையில் நிறைய பாரபட்சங்களை எதிர்கொள்கிறேன். ஆனாலும், உங்களை விட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை” என்று கூறியிருக்கிறார்.
“எமர்ஜென்சி திரைப்படத்தின் கதையை உங்களிடம் சொல்ல வந்தேன். ஆனால், நீங்கள் என்னை சந்திக்க கூட விரும்பவில்லை. உங்களுக்கு பிரச்சாரப் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால், எமர்ஜென்சி திரைப்படத்தை விமர்சகர்கள் மாஸ்டர் பீஸ் என்று கூறினர். ஆனால், உங்களது கண்பூடித்தனமான வெறுப்பால் இது உங்களுக்கு தெரியவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி பேசியிருப்பது குறித்து எக்ஸ் பக்கத்தில் வலது சாரிகள் பலவாறாக பேசி வருகின்றனர். குறிப்பாக, அவர் மதமாற்றம் செய்திருப்பதை குறிப்பிட்டு, அவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று வெறுப்புணர்வை நஞ்சாக பரவ விட்டு வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக கங்கனா பேசியிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.