Lakshmy Ramakrishnan Love Proposal Kamal Haasan : பிரபல நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தான் கமல்ஹாசனுக்கு ப்ரப்போஸ் செய்ததாக கூறியிருக்கிறார். அதற்கு, கமல் என்ன ரிப்ளை கொடுத்தார் என்பதை இங்கு பார்ப்போம்.
Lakshmi Ramakrishnan Love Proposal Kamal Haasan : பல தமிழ் படங்களில், துணை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இவர் நடிப்பில் உருவான யுத்தம் செய், நாடோடிகள், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன. சில படங்களை இவர் இயக்கியும் இருக்கிறார். இவர், பெரிதும் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி “சொல்வதெல்லாம் உண்மை” இந்த நிகழ்ச்சியில் இவர் நடுவராக இருந்தார். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்பாளராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் கமலிடம் ப்ரப்போஸ் செய்தது குறித்து பேசியிருக்கிறார்.
1/7நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், அறிமுகமானதே அம்மா கதாப்பாத்திரங்களில் நடித்துதான். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு தாயாக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஒன்றும் தெரியாத இன்னொசண்ட் அம்மாவாக வருவார். இவர்தான், தற்போது கமலுக்கு பர்ப்போஸ் செய்த விஷயத்தை பற்றி பேசியிருக்கிறார்.
2/7ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் மன்னன் என்கிற பட்டம், கமலுக்குதான் கரெக்டாக இருக்கும் என்று பலர் கூறியிருக்கின்றனர். ஆன் ஸ்கிரீனில் பல நடிகைகளுடன் கமல் நெருக்கமாக நடித்திருக்கிறார். அந்த காலத்தில், இதனாலேயே பல பெண்கள் இவருக்கு ரசிகைகளாக இருந்தனார்.
3/7கமல்ஹாசன் இதுவரை இரண்டு முறை திருமணம் செய்திருக்கிறார். அந்த இரண்டு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. பல காதல் உறவிலும் இருந்திருக்கிறார்.
4/7லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஒரு முறை கமலுக்கு ப்ரப்போஸ் செய்தது பற்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அப்போது, தான் கமலிடம் காதலை சொல்ல சென்றதையும் அவர் ஒரே வார்த்தையில் தன்னை ஆஃப் ஆக்கிய கதையையும் சொல்லியிருக்கிறார்.
5/7லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கல்லூரி காலங்களில் இருந்தே நடிகர் கமல்ஹாசனை பெரிதாக காதலித்தாராம். அவரை ஒருமுறை நேரில் சந்திக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம். இந்த சமயத்தில் அவரிடம் எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டும் என்று முடிவுடன் அவர் அருகி சென்றுள்ளார் லக்ஷ்மி.
6/7லக்ஷ்மி, தன் காதலை சொல்லும் முன்பே கமல்ஹாசன் அவரை, “தங்கச்சி” என்று அழைத்து விட்டாராம். இந்த ஒரு வார்த்தை தனது காதல் கோட்டையை தகர்த்து விட்டதாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
7/7லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பல குடும்ப சண்டைகளை தனது “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார். இதையடுத்து, புரட்சி அல்லது புற்போக்கை பேசும் எந்த படம் வெளியானாலும் அதை பற்றி எதையாவது ஒரு அவதூறு கருத்தை கூறுவதும் அவரது வழக்கம். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்பாளராக இருக்கிறார்.