அஜித் மேல் ஆசைப்பட்ட நடிகை..அவரு சொன்ன ஒரு வார்த்தையால் ஆஃப் ஆனார்! யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Sep 17, 2025, 01:54 PM IST|Updated: Sep 17, 2025, 01:54 PM IST

Maheswari Crush On Ajith Kumar : பிரபல நடிகை ஒருவர், தனக்கு அஜித் குமார் மீது பெரிய க்ரஷ் இருந்ததாகவும், ஆனால் அவர் ஒரே வார்த்தையில் தன் மனதை உடைத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவல் இதோ!

Maheswari Crush On Ajith Kumar : தமிழ் திரையுலகில், டாப் நடிகராக விளங்குபவர் அஜித் குமார். இவர் மீது பல நடிகைகளுக்கு க்ரஷ் இருந்தது. அதில், குறிப்பாக அவருடன் சேர்ந்து நடித்த ஒரு நடிகை, தற்போது படப்பிடிப்பில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Ajith Kumar1/7

அஜித் குமார்

தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருப்பவர், அஜித் குமார். இவர், 90களில் இருந்து இப்போது வரை 63க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இளமை காலத்தில் இவர் மீது க்ரஷ் இல்லாத பெண்களே கிடையாது.

AK 2/7

AK

அஜித், இளமை காலத்தில் நடித்த பல படங்கள் ஹிட் ஆன போது பல பெண்கள், இவரைப்போல தனக்கு கணவர் வேண்டும் என்று நினைத்தனர். 

Ajith Films3/7

அஜித் படங்கள்

அஜித் குறித்து சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் பேசியுள்ளார். அப்போது, தனக்கு அவர் மீது பெரிய க்ரஷ் இருந்ததாக கூறியிருக்கிறார்.

AK Crush4/7

க்ரஷ்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையும், பிரபல நடிகையுமான மகேஸ்வரி தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும், மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தார்.

Ullaasam5/7

உல்லாசம்

‘உல்லாசம்’ படத்தில் அஜித்துடன் சேர்ந்து அவருக்கு ஜோடியாக மகேஸ்வரி நடித்திருந்தார். இந்த படம், பெரிய ஹிட் ஆனது. 

Maheshwari6/7

மகேஷ்வரி

இதில் நடித்த போது தனக்கு அஜித் மீது பெரிய க்ரஷ் இருந்ததாகவும், அவருடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் பணியாற்றியதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். 

Sister7/7

தங்கை

படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித்தை பார்க்க முடியாமல் வருத்தத்தில் இருந்தாராம், மகேஸ்வரி. அப்போது தன்னிடம் அஜித்தே வந்து பேசியதாகவும், “நீ எனக்கு தங்கை போல..” என்று கூறியதாகவும் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.