Actress Mamitha Baiju Movie Lineups: பிரபல நடிகை ஒருவருக்கு அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அவர் யார்? எந்தெந்த படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
1/7நயன்தாரா, த்ரிஷா ஒரு காலத்தில் எப்படி வரிசைகட்டி படங்கள் வெளியானதோ, அதேபோல், தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி வருகிறார் பிரபல நடிகை ஒருவர்.
2/7அவர் வேறு யாரும் இல்லை, பிரேமலு படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை மமிதா பைஜு தான். இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
3/7ட்யூட்: தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ட்யூட் படத்தில் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மமிதா பைஜு. இப்படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்திருப்பதாக தெரிகிறது.
4/7ஜனநாயகன்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் மமிதா பைஜு நடித்திருக்கிறார். ஜனநாயகன் திரைப்படம் வரும் 2026 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
5/7சூர்யா 46: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் தற்போது நடிகர் சூர்யா நடித்து வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்து வருகிறார். இப்படமும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது.
6/7தனுஷ் 56: நடிகர் தனுஷுக்கு கடைசியாக இட்லி கடை படம் வெளியானது. தற்போது அவர் அவரது 56வது படத்தில் நடித்து வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் மமிதா பைஜு நடிக்கிறார்.
7/7இரண்டு வானம்: இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் இரண்டு வானம். இப்படத்தில் விஷ்னு விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மமீதா பைஜு.