சாதி, மதம் குறித்து..நடிகை மீனா வெளியிட்ட பதிவு! எல்லாரும் இதை தெரிஞ்சிக்கணும்..

Written ByYuvashree
Published: Aug 05, 2026, 10:19 AM IST|Updated: Aug 05, 2026, 10:19 AM IST

Actress Meena : நடிகை மீனா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Actress Meena : 90களில், பலருக்கு கனவு கன்னியாக இருந்தவர், மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக வளர்ந்து, பின்னர் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மீனா நடித்து வருகிறார். இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Meena1/5

மீனா

தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகையாக வலம் வந்தவர் மீனா. 90களில், பல லட்சம் இளைஞர்களுக்கு கனவுக்கன்னியாக திகழ்ந்த இவர், முதலில் குழந்தை நட்சத்திரமாகத்தான் சினிமாவிற்குள் அறிமுகமானார். ஒரு காலத்தில் ரஜினிகாந்துடன் குழந்தையாக நடித்த இவர், வளர்ந்த பின்பு அவருக்கு ஜோடியாகவும் நடித்து விட்டார்.

 

Famous Actress2/5

முன்னணி நடிகை

மீனா இதுவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அஜித்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் இப்போது, சில குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். 

 

Languages3/5

நடித்த மொழிகள்

மீனா தமிழில் மட்டுமன்றி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். மீனாவிற்கு இப்போதும் மோகன்லால் போன்ற முக்கிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.

 

Post4/5

பதிவு

மீனா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “உங்கள் சாதி, மதம், பிறந்த இடம், பாலினம் எல்லாமே நீங்கள் தேர்வு செய்தவை அல்ல. பிறப்பால் கிடைத்தவை. இதனால், அவற்றை நினைத்து பெருமைப்பட வேண்டாம். இதற்கு பதிலாக உங்களுடைய குண்நலன், செயல்கள், நீங்கள் தினமும் தேர்வு செய்யும் மனிதநேயம் ஆகியவற்றை நினைத்து பெருமைப்படுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Viral5/5

வைரல்

மீனாவின் இந்த பதிவானது நெட்டிசன்கள் மத்தியில் பாசிடிவான ரியாக்‌ஷனை பெற்று வருகிறது. இதனை பலர் ஷேர் செய்து வருகின்றனர்.