1 முழம் பூவிற்கு ரூ.1 லட்சம் அபராதம்! பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்..

Written ByR Balaji
Published: Sep 08, 2025, 03:52 PM IST|Updated: Sep 08, 2025, 03:52 PM IST

Actress Navya Nair Fined Rs 1 Lakh: நடிகை நவ்யா நாயர், 1 முழம் பூவை எடுத்துச் சென்றதால், ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்தியதாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1/7

பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், தமிழில் சேரனின் ஆட்டோகிராப் படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் இவர் அழகிய தீயே, மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

2/7

இவர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள மலையாள அமைப்பினர் நடத்திய ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளத்தில் இருந்து சென்றிருக்கிறார். 

3/7

இந்த நிலையில், அவர் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும், அவரிடம் இருந்த ஒரு முழம் மல்லிப் பூவுக்காக அவருக்கு ரூ. 1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

4/7

இதற்கு காரணம் ஆஸ்திரேலியாவில் பல்வேறு பொருட்களை விமான பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் மல்லிப் பூவும் அடங்கும். 

5/7

இது தொடர்பாக பேசிய நடிகை நவ்யா நாயர், எனது தந்தை ஒரு முழம் மல்லிப் பூ வாங்கி அதனை இரண்டாக துண்டித்து ஒன்றை தலையில் வைத்துக்கொள்ளவும் ஒன்றை எனது பையில் வைத்துக்கொள்ளவும் கொடுத்து அனுப்பினார். 

6/7

விதிகளின் படி நான் செய்தது தவறுதான். நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். வேண்டுமென்றே செய்யவில்லை. அதற்காக விமான நிலையத்தில் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 28 நாட்களுக்குள் செல்லுத்துமாறு கூறி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

7/7

ஆஸ்திரேலியாவில் வெளிநாடு செடிகள், பூக்கள், பழங்கள், காய்கறிகள், மண், விலங்குகளுக்கான பொருட்கள் என எதையும் கொண்டு வர அனுமதி கிடையாது. அவை அந்நாட்டில் வேளாண்மையை பாதிக்கலாம் என்பதால், இப்படியான கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.