Nayanthara Face Before Cinema : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார், நயன்தாரா. இவர், சினிமாவிற்கு வரும் முன் என்ன செய்து கொண்டிருந்தார்? இவர் முகம் இளமை காலத்தில் எப்படி இருந்தது? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Nayanthara Face Before Cinema : தமிழ் திரையுலகில் டாப் நடிகையாக இருக்கும் நயன்தாரா, இப்போது சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர், சினிமாவிற்கு வரும் முன்பு ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். அப்போது அவரது முகம் எப்படியிருந்தது என்பதை இங்கு பார்ப்போம்.
தென்னிந்தியாவின் உச்ச நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தொடக்கத்தில் ஏறுமுகத்தில் எப்படி இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதோ, அதே போல இப்போதும் இவர் மார்கெட் உச்சத்தில் இருக்கிறது.
நயன்தாராவிற்கு, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டம் கிடைத்தது. ஆனால், இப்படி தன்னை அழைக்க வேண்டாமென அவரே சில நாட்களுக்கு முன்பு அறிக்கையை வெளியிட்டார்.
மிக இளம் வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்த நயன்தாராவிற்கு, தமிழ் சினிமா பெரிய பிரேக் கொடுத்தது. நயன், சில படங்களுக்காக உடல் எடை மெலிந்து, தன்னை மாற்றிக்க்கொள்ளவும் செய்தார்.
ஒரு காலத்தில் அதிக படங்களில் நடித்து வந்த நயன், 2022ல் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு தன் குடும்பத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறார். இப்போது படங்களில் சைன் செய்வதும் கொஞ்சம் குறைந்திருக்கிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் டாப் இடத்தில் இருக்கும் நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து இவர் சினிமாவிற்கு வரும் முன்பு டிவி தொகுப்பாளராக இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதான் சினிமாவிற்கு வரும் முன்பு, வந்த புதிதிலும் இருந்த நயன்தாராவின் முகம். இளமையாக இருந்த போது கேரளாவில் ஒரு தொலைக்காட்சியில் அவர் தொகுப்பாளராக இருந்தார்.
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியானது, 2003ஆம் ஆண்டில் ஒளிபரப்பானதாக கூறப்படுகிறது. இது, இல்லத்தரசிகள் விரும்பும் ‘சமயம்’ எனும் பெயர் கொண்ட நிகழ்ச்சியாக இருந்ததாம். இதை அவர் தொகுத்து வழங்கிய போது அவரது பெயர், ‘டயானா’ என்று இருந்தது. பின்னர் சினிமாவிற்கு வந்த போது அவரது பெயரை நயன்தாரா என மாற்றினர்.