Oviya Summer Vacation Pics: திரைப்படங்களில் தனிச்சிறப்புடன் கவனம் பெற்ற ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் ரசிகர் ஆதரவைப் பெற்றார். தற்போது வெளிநாட்டில் சம்மர் ஹாலிடேவை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
Oviya Latest Photos: சமீபத்தில் சில சர்ச்சைகளிலும் இடம் பெற்ற ஓவியா, தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களில் இருக்கிறார். அவர் பகிரும் ஸ்டோரி மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் அவர் சம்மர் லுக்கில் பகிர்ந்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் அளவுக்கு டிரெண்டாகியுள்ளன.
நடிகை ஓவியா, 2010-ம் ஆண்டு "களவாணி" படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து "மன்மதன் அம்பு", "மெரினா", "மூடர்கூடம்", "யாமிருக்க பயமே" போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்தபின், பிக்பாஸ் சீசன் 1-இல் கலந்து கொண்டு பெரும் ரசிகர் ஆதரவை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் காட்டிய நேர்மை, உணர்ச்சி வெளிப்பாடுகள் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றன.
நிகழ்ச்சிக்கு பிறகு, ஓவியாவின் சமூக வலைதள பின்தொடர்வோர்கள் கணிசமாக உயர்ந்தனர்.
தற்போது அவர் வெளிநாட்டில் ஜாலியாக சம்மர் விடுமுறையை கழித்து வருகிறார்.
அந்த விடுமுறை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
ஓவியாவின் சம்மர் ஸ்டைல் மற்றும் கிளாமர் லுக்குகள், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.