Pooja Hegde Love Rumours: தமிழில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை பூஜா ஹெக்டே, ஒரு கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்கிறார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இதற்கு அவரே பதில் அளித்துள்ளார்.
1/72012ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் முகமுடி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை பூஜா ஹெக்டே.
2/7பின்னர் மொஹெஞ்சதாரோ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. தற்போது சினிமா துறையில் ஓர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
3/7இந்த சூழலில், நடிகை பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திரையுலகில் வதந்திகள் பரவி வருகின்றன. பூஜா மும்பையில் வசிக்கும் ஒரு கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
4/7இந்த நிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டே இந்த விஷயத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். "எனது முழு கவனமும் எனது வேலையில் மட்டுமே உள்ளது, நான் தனிமையில் இருக்கிறேன்.. எனது திருமணம் பற்றிய செய்திகளைப் படித்திருக்கிறேன், ஆனால் நான் அதில் கவனம் செலுத்துவதில்லை" என்று நடிகை பூஜா ஹெக்டேதெளிவாகக் கூறினார்.
5/7கிரிக்கெட் வீரர்களுடன் பூஜாவின் பெயர் தொடர்புபடுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, நடிகை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்வதாகவும், அவர் பூஜா ஹெக்டே சகோதரரின் திருமணத்திலும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
6/7பூஜா ஹெக்டே தமிழில் சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தின் சூர்யாவுடன் நடித்திருந்தார். அதன்பின், கூலி படத்தின் மோனிகா பாடலுக்கு நடனமாடி இருந்தார். இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
7/7தற்போது அவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் நடித்து வருகிறார். மேலும், காஞ்சனா 4-ல் அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.