Most Award Winning actress: தென்னிந்திய சினிமாவில் அதிக விருதுகளை பெற்ற நடிகை யார்? அவர் என்னென்ன விருதுகளை பெற்றிருக்கிறார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Most Awarded Actress In South Indian Cinema: ஒரு நடிகராக இருந்தாலும் சரி நடிகையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு விருது தான் ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
நடிகைகளை பொறுத்தவரையில் அவர்கள் நீண்ட காலம் சினிமாவில் நீடிப்பது என்பது கடினமான விஷயமே. அப்படி நீண்ட காலமாக சினிமாவில் நீடித்து இருப்பவர்கள் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் மட்டுமே.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்திருக்கும் த்ரிஷா, நயன்தாராவை விட குறைந்த அனுபவம் கொண்ட ஒரு நடிகை அவர்களை விட அதிக விருதுகளை பெற்றிருக்கிறார்.
அந்த நடிகை யார் என்றால், அது நமது சாய் பல்லவி தான். இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் முதல் 10 ஆண்டுகளில் அதிக விருதுகளை வென்ற சாதனையை அவர் வைத்திருக்கிறார்.
சாய் பல்லவி வெறும் 15 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அப்படி இருக்கையில், அவர் இதுவரை 28 விருதுகளை வென்றுள்ளார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா முதல் 10 ஆண்டுகளில் 15 விருதுகளையும் த்ரிஷா 19 விருதுகளை மட்டுமே வென்றுள்ளார்.
சாய் பல்லவி பிரேமம், ஃபிடா, லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்க ராய், விரத பர்வம், கார்கி ஆகிய படங்களில் நடித்ததற்காக சாய் பல்லவி ஆறு பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.
அதேபோல், பிரேமம், லவ் ஸ்டோரி மற்றும் அமரன் ஆகிய படங்களுக்காக மூன்று SIIMA விருதுகளையும் வென்றுள்ளார். இரண்டு ஆனந்த விகடன் சினிமா விருதுகள், இரண்டு ஏசியாநெட் திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் என 28 விருதுகளை வென்றுள்ளார்.
லேடி பவர்ஸ்டார் என அழைப்படும் சாய் பல்லவியிடம் இல்லாத ஒரே பெரிய விருது தேசிய் விருது மட்டுமே. அதையும் அவர் கார்கி படத்திற்காக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நூலிழையில் தவறிப்போனது.