Actress Samantha Relationship: சமந்தா மற்றும் ராஜ் நிடிமோறு மீண்டும் சர்ச்சையில்! துபாயில் எடுத்த வீடியோவில் சமந்தாவுடன் கை பிடித்து விளையடும் நபர் இயக்குனர் ராஜ் நிடிமோறு என்று பரவலாக பேச்சு பொருள் ஆயிற்று.
Actress Samantha Relationship: ரீல் வீடியோவில் இருவரும் கை பிடித்து நடக்கும் காட்சி வைரலாகியுள்ளது. முதலாக The Family Man 2 மற்றும் Citadel: Honey Bunny சீரிஸில் இணைந்திருந்த இருவரின் நட்பு மீண்டும் பேசப்படுகிறது. ராஜ்-சமந்தா உறவைப் பற்றிய வதந்தி மற்றும் ரசிகர் பரபரப்பு தற்போது சூடாக உள்ளது.
1/8துபாயில் சமந்தா: சமந்தா ரூத் பிரபு துபாயிலிருந்து பகிர்ந்த ரீல் தற்போது வைரலாகியுள்ளது. அதில், ஒருவருடன் கை பிடித்து விளையாடும் காட்சி காணப்படுகிறது. ரசிகர்கள் அந்த நபர் இயக்குநர் ராஜ் நிடிமோறு என்று யூகிக்கிறார்கள். இதனால் சமந்தா மற்றும் ராஜ் இடையேயான உறவு குறித்து மீண்டும் பேசப்படுகிறது.
2/8ரசிகர்கள் கமெண்ட்ஸ்:
“Did you soft launch your new man?” “Did she just make her relationship public??” “Be happy samantha u deserve it...”என பல கமெண்ட்கள் அந்த ஒரு ரீலில் செய்யப்பட்டுள்ளது. மேலும், திரைப்பட நட்சத்திரங்களும் கமெண்ட் போட்டதால், பேச்சு மேலும் சூடானது.
3/8முதல் கூட்டணி: சமந்தா மற்றும் ராஜ் நிடிமோறு முதலில் The Family Man 2-இல் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு Citadel: Honey Bunny சீரிஸிலும் வேலை செய்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக பேச்சு பரவியது. இப்போது துபாய் ரீல் காரணமாக அந்த வதந்தி மீண்டும் சூடுபிடித்துள்ளது.
4/8வெளிப்படையான காட்சிகள்: 2025 ஜூலையில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சமந்தா மற்றும் ராஜ் நிடிமோறு சேர்ந்து வந்தனர். அதற்கு முன் விமானத்தில் எடுத்த செல்ஃபி வைரலானது. இந்த புகைப்படங்கள் வெளியாகியதும், இருவரும் நெருக்கத்தில் உள்ளார்கள் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுப்பெற்றது. மேலும் ராஜ் முன்நாள் மனைவி போட்ட ஸ்டோரியும் பேச்சு பொருள் ஆனது.
5/8துபாய் ரீல்: சமந்தா போட்ட ரீல் வீடியோவில், கருப்பு ஜாக்கெட், ஜீன்ஸ், பை அணிந்த ஒருவருடன் கை பிடித்து நடக்கும் காட்சி இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் உடனே “இவர் ராஜ் நிடிமோறு தான்” என்று சொல்லத் தொடங்கினர். இந்த வீடியோ வைரலானதால், இருவரின் உறவைப் பற்றி மேலும் பேசப்படுகிறது.
6/8உறவு: சமந்தா மற்றும் ராஜ் தற்போது சேர்ந்து வீடு தேடிக்கொண்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜ் 2022ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தவர். தற்பொழுது அவருக்கும் சமந்தாவுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்று வருகிறது என்று ரசிகர்கள் மற்றும் செய்திகள் கூறுகின்றன. இருவரும் நெருங்கிய உறவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7/8மறுப்பு: சமந்தாவின் மேனேஜர் இதனை வெறும் வதந்தி என்று கூறியுள்ளார். சமந்தாவின் மேனேஜர் கூறியது: ராஜ்க்கு மகள் இல்லை, சமந்தாவுடன் இருக்கும் குழந்தை இயக்குநர் கிருஷ்ணா டிகேயின் மகள் தான்.
8/8புதிய தொடர்: ராஜ் மற்றும் டிகே கூட்டணியுடன் சமந்தா மீண்டும் நடிக்கிறார். அவர்கள் புதிய Netflix சீரிஸ் Rakt Brahmand: The Bloody Kingdom 2026ல் வெளியிடப்பட உள்ளது. இதற்குமுன், ராஜ் The Family Man 3 படத்தில் நடித்து வருகிறார், அது 2025 நவம்பர் மாதத்தில் வெளியீடு பெற இருக்கிறது. ரசிகர்கள் இருவரையும் காத்துக்கொண்டுள்ளனர்.