Actress Samantha: நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் (Alimony) தொகையை நடிகை சமந்தா வேண்டாம் என்று உதறித் தள்ளி உள்ளார்.
தமிழ் நடிகையான நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கு பெற்றனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஜோடியாக இருந்த இவர்கள் இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சமந்தா மற்றும் நாக சைதன்யா ஒரு மனதாக பிரிகிறோம் என்று அறிகையில் தெரிவித்து இருந்தனர்.
விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் இதனை நடிகை சமந்தா மறுத்துள்ளார்.
தனக்கு யாருடைய பணமும் வேண்டாம் என்றும், நான் உழைத்து சம்பாதித்துக் கொள்வேன் என்றும் சமந்தா இந்த பணத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
விவாகரத்து பெற்ற பிறகு நடிகை சமந்தா பிஸியாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டில் தற்போது அதிகம் கவனம் செலுத்துகிறார்.
மறுபுறம் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்ய பிறகு, பாலிவுட் நடிகையான சோபிதாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.