Actress Samantha Entrepreneur: சமந்தா ரூத் பிரபு தொழில்முனைவோராக மாற்றமா? ZOY மூலம் பெண்கள் ஆரோக்கியத்தில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது? சமந்தா பெண்களுக்கான உடல் நலம் பாதுகாப்பை மிகவும் கவனம் செலுத்துகிறார்.
Actress Samantha Entrepreneur: பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது திரைப்பட வாழ்க்கையைத் தாண்டி தொழில்முனைவு உலகிலும் வலுவான அடித்தளம் அமைத்து வருகிறார். Secret Alchemist பின், தற்போது பெண்களின் மாதவிடாய் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த ZOY நிறுவனத்தின் co-founder ஆனார்.
1/7Entrepreneurship: பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தொழில்முனைவோர் உலகில் தனது பயணத்தை விரிவாக்கி வருகிறார். Secret Alchemist நிறுவனத்தின் பின், அவர் தற்போது ZOY எனும் பெண்கள் மாதவிடாய் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிராண்டின் co-founder ஆனார்.
2/7Innovation: ZOY நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தியின் கூற்றுப்படி, இந்திய மாதவிடாய் சந்தை 2030க்குள் $1.3 பில்லியன் ஆக உயரும். தற்போது சந்தையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கெமிக்கல் நிறைந்த தயாரிப்புகள் PCOS, UTI போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. இதை மாற்ற ZOY Snow Lotus Therapy Pad போன்ற புதுமையான தீர்வுகளை கொண்டு வருகிறது.
3/7Empowerment: "ZOY-யுடன் இணைவது மாதவிடாய் பராமரிப்பை மட்டுமே குறிக்கவில்லை. பெண்களின் முழுமையான உடல்நலத்தை மறுபரிசீலனை செய்வது. பெண்கள் தங்கள் உடல் குறித்த ஆரோக்கியமான, நுணுக்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கான toxin-free, holistic தயாரிப்புகளை நாங்கள் உருவாக்குகிறோம்," என சமந்தா தெரிவித்தார்.
4/7Wellness: ZOY உடன் இணைப்பு சமந்தாவின் wellness entrepreneurship மீது உள்ள கவனத்தை வெளிப்படுத்துகிறது. தனது உடல்நலப் பயணம், mindful living, fitness, toxic-free வாழ்க்கை முறையை ஆதரிப்பதன் காரணமாக, பெண்கள் அதிகாரமடைந்து ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
5/7Healing: "எனது மனநலம் தொடர்பான அனுபவம் மிகவும் தனிப்பட்டது. கடினமான காலத்தில் நான் spiritual wellness மூலம் நிம்மதி கண்டேன். அதுவே என்னை holistic wellness பக்கம் தள்ளியது. அதிலிருந்து இன்றுவரை ஆரோக்கியம் என் வாழ்வின் மையமாக உள்ளது," என்று சமந்தா பகிர்ந்துள்ளார்.
6/7Passion: "என் ஆர்வங்களின் வழியாக நான் என் அறிவைப் பெருக்கிக்கொள்கிறேன். Secret Alchemist, Saaki, Ekam, Chennai Pickleball போன்றவற்றில் ஈடுபட்டது என் தனிப்பட்ட ஆர்வம். மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றம் செய்யும் பிராண்டுகளைத் தேர்ந்தெடுப்பதே என் நோக்கம்," என்று சமந்தா கூறினார்.
7/7Journey: சமந்தா, Baana kaathadi, U-Turn, 10 enrathukkulla, anjaan, போன்ற படங்களிம் நடித்துள்ளார். ஆனால், திரைப்படங்களைத் தாண்டி, தனது தொழில்முனைவு பயணத்தில் அவர் மொத்தம் 12 ஸ்டார்ட்அப்களில் முதலீட்டாளராகவும், நிறுவுநராகவும் இணைந்துள்ளார்.