90 கிலோ To 65 கிலோ..சோனாக்‌ஷி சின்ஹாவின் ஃப்ட்னெஸ் ரகசியம்! என்ன செய்தார் தெரியுமா?

Sonakshi Sinha Weight Loss Secret : பிரபல நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, தன் உடல் எடையை சினிமாவிற்கு வந்த புதிதில் குறைத்தார். அது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Sonakshi Sinha Weight Loss Secret : பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர், சோனாக்‌ஷி சின்ஹா. இவர், திரையுலகிற்கு வந்த புதிதில் நிறைய உருவ கேலிகளை சந்தித்தார். இதனால், உடல் எடை குறைப்பதை குறிக்கோளாக் வைத்து வெயிட் லாஸ் செய்தார். அதற்கு அவர் கொடுக்கும் டிப்ஸ், இதோ.

1 /7

சோனாக்‌ஷி சின்ஹாவை, அனைவருக்கும் ‘லிங்கா’ படம் மூலம் தெரியும். இதிலிருந்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான முகமாக மாறிய இவர், இப்போது இந்தியாவின் பிரபல நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார். 

2 /7

பாலிவுட் நடிகையான சோனாக்‌ஷி சின்ஹா, தன் உடல் எடை குறித்து சில நேர்காணல்களில் பகிர்ந்திருக்கிறார். அதில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

3 /7

சோனாக்‌ஷி சின்ஹா, சிறு வயதில் இருந்தே உடல் எடை அதிகமாக இருப்பவர் ஆவார். இதனால், இவரை பலர் உருவ கேலிக்கு ஆளாக்கி இருக்கின்றனர். இது குறித்தும் அவர் தனது நேர்காணலில் பேசியிருந்தார்.

4 /7

உடல் எடையை குறைக்க, சுமார் 2.5 வருடங்களாக முயற்சித்த சோனாக்‌ஷி, அதை செய்ய முடியாமல் துவண்டதாக கூறியிருக்கிறார். 

5 /7

கல்லூரி நாட்களில் உடல் எடையை குறைக்க தொடங்கிவிட்ட சோனாக்‌ஷி இரண்டரை வருடம் டயட், உடற்பயிற்சி உள்ளிட்ட விஷயங்கள் மூலம் கடுமையாக உடல் எடையை குறைக்க முயன்றிருக்கிறார். 

6 /7

18 வயதில் ட்ரெட்மில்லில் ஓட தொடங்கிய அவர், 30 வினாடிகள் கூட ஓட முடியாமல் தவித்தாராம். யோகா, ஜிம், கார்டியோ, என எல்லா பயிற்சிகளையும் செய்தாராம். கூடவே சேர்த்து பைலட்ஸ் பயிற்சியையும் செய்திருக்கிறார்.

7 /7

எல்லா முறையும், தான் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்த முயற்சிகளை மேற்கொண்டதாகவும், இது தனக்கு எடையை குறைக்க பெரிதும் உதவியதாக கூறியிருக்கிறார். முன்னர் 95 கிலோ வரை இருந்த இவர் இப்போது 65 கிலோ வரை இருக்கிறாராம்.  (பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் பொது தளங்களில் சோனாக்‌ஷி சின்ஹா நேர்காணல்களில் கூறியதை வைத்து எழுதப்பட்டவை. இதற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது.)