Trisha Miss Chennai Winning Answer : பிரபல நடிகை த்ரிஷா, மிஸ் சென்னை பட்டம் பெற்று மாடல் ஆன பிறகுதான் திரையுலகிற்கு வந்தார். அப்படி அவர், 1999ல் மிஸ் சென்னை பட்டம் பெறுவதற்கு உதவிய ஒரு பதில் என்ன தெரியுமா? இங்கு பார்ப்போம்.
Trisha Miss Chennai Winning Answer : நடிகைகள் பலர், எடுத்தவுடன் சினிமாவிற்குள் நுழைந்து விடுவதில்லை. முதலில் மாடலிங் துரையில் இருந்து பின்பு திரையுலகிற்கு வருகின்றனர். அப்படித்தான் நடிகை த்ரிஷாவும். இவர், 1999ல் மிஸ் சென்னை பட்டம் வென்றார். அதன் பிறகு, சில ஆண்டுகள் மாடலிஞ் செய்தார். இதையடுத்துதான் அவருக்கு வரிசையாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர், 1999ல் மிஸ் சென்னை பட்டம் வெல்ல ஒரே ஒரு பதில்தான் காரணமாக இருந்ததாம். அது என்ன பதில் தெரியுமா?
தமிழ் திரையுலகில், தற்போது டாப் நடிகையாக இருப்பவர் த்ரிஷா. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக தமிழ் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கும் இவர், ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.
த்ரிஷா, நடிக்க வருவதற்கு முன்பு சில மாதங்கள் மாடலிங் செய்தார். மிக இளம் வயதில் திரையுலகிற்குள் கால் பதித்த த்ரிஷா, மாடலிங் செய்த போது 12ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதிகம் சம்பளம் வாங்கும் மற்றும் அதிக படங்களில் கமிட் ஆகும் நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார் த்ரிஷா. 2025ஆம் ஆண்டில் மட்டும், இவர் நடித்த 2 தமிழ் படங்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.
த்ரிஷாவை அவரது ரசிகர்கள், “சவுத் குயின்” என்றும் அழைப்பதுண்டு. காரணம், தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் இவர் என்பதால்.
த்ரிஷா, சினிமாவிற்குள் நுழையும் முன்பு, 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்றார். இவர் இந்த பட்டத்தை பெற்ற பிறகுதான் பல்வேறு வாய்ப்புகள் இவர் வாசற்கதவை தட்டியது.
வழக்கமாக மிஸ் யுனிவர்ஸில் இருந்து மிஸ் சென்னை வரை அழகிப்போட்டு நடக்கையில், யார் சிறந்தவர் என தேர்ந்தெடுக்க சில விதிமுறைகள் இருக்கின்றன. அவர்களின் அழகுக்காக மட்டும் பட்டம் தரப்படுவதில்லை. அவர்களின் புத்திக்கூர்மைக்காகவும் இந்த பட்டமானது தரப்படுகிறது.
அந்த மிஸ் சென்னை அழகி கடைசி சுற்றில் த்ரிஷாவிடம், “மனிதனுக்கு அவசியமாக இருக்க வேண்டிய குணம் எது?” என்று கேட்டார்கள். அதற்கு த்ரிஷா, “நேர்மை” என்கிற பதிலை தெரிவித்து பட்டத்தை அடித்து சென்றாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.