Trisha Jyothika Then And Now Latest Photos : தமிழ் திரையுலகில், பிரபல நடிகைகளாக வலம் வருபவர், த்ரிஷா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Trisha Jyothika Then And Now Latest Photos : கோலிவுட் திரையுலகின் டாப் நடிகைகளாக விளங்கியவர்கள் த்ரிஷா மற்றும் ஜோதிகா. 90s குழந்தைகள் முதல் 2k குழந்தைகள் வரை அனைவருக்கும் ஃபேவரட் ஆக விளங்கிய இவர்கள், சமீபத்தில் ஒன்றாக சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டனர். அவை தற்போது வைரலாகி வருகின்றன.
90s குழந்தைகளின் இதயத்தை கொள்ளையடித்த கதாநாயகிகள், த்ரிஷாவும் ஜோதிகாவும். இருவருமே, ஒரே சமயத்தில் திரையுலகிற்கு வந்து அன்றைய டாப் நடிகைகளாக விளங்கினர்.
ஜோதிகா, தனது கெரியரில் டாப்பில் இருந்த போது, சூர்யாவை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 36 வயதினிலே படம் மூலம் கம்-பேக் கொடுத்தார்.
41 வயதிலும் சிங்கிளாகவும் இளமையாகவும் இருக்கும் த்ரிஷா, இப்போதும் நாயகி கதாப்பாத்திரத்தில்தான் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சூர்யா, த்ரிஷா, ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகைகளும் திரை பிரபலங்களும் சந்தித்துக்கொண்டனர்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக நேரம் செலவழித்த வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.
ஜோதிகாவும் த்ரிஷாவும் கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பழைய நினைவுகள் ததும்பியோடி உள்ளது. இதை பார்த்தவர்கள், “இருவருக்கும் வயசே ஆகாதா?” என்று கேட்டு வருகின்றனர்.
இருவரும் இளமை காலத்தில் எப்படி இருக்கின்றனர், இப்போது எப்படியிருக்கின்றனர் என்ற ஒப்பீடு புக்கைப்படத்தை சிலர் இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டனர். தற்போது சூர்யாவும் த்ரிஷாவும் பல ஆண்டுகளுக்கு பிறகு அவரது 45வது திரைப்படத்தில் ஒன்றாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.