41 வயதில் கல்யாண பொண்ணாகும் த்ரிஷா? வைரலாகும் போட்டோ..!

Actress Trisha Recent Post : பிரபல நடிகை த்ரிஷா, சமீபத்தில் காதல் குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவருக்கு கல்யாணமா? எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்!

Actress Trisha Recent Post : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 41 வயதிலும் சிங்கிள் அண்ட் யங் ஆக இருக்கும் த்ரிஷா, கடந்த 2 ஆண்டுகளில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவருக்கு ஒரு முறை பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் வரை சென்று நின்று போனது. இந்த நிலையில், சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக இருப்பவர், த்ரிஷா. இவரது நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளில் பல மொழி படங்களில் கமிட் ஆகிவிட்டார். 

2 /7

லியோ படத்தை தொடர்ந்து, விஜய் நடித்த கோட் படத்தின் மட்ட பாடலுக்கும் நடனமாடினார். இதுவரை, ஒரு பாடலுக்கு மட்டும் ஆடாத நடிகையாக இருந்த இவர், இதன் மூலம் அதனை தகர்த்தெரிந்தார். 

3 /7

விஜய்யுடன் த்ரிஷா நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், அதை நிரூபிக்கும் வகையிலான சான்றுகள் எதுவும் இல்லை. 

4 /7

த்ரிஷா நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி படம் வெளியானது. இது, அஜித்துடன் த்ரிஷா சேர்ந்து நடித்த 5 படங்களுள் ஒன்றாகும். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், பெருந்தோல்வியை தழுவியது.

5 /7

த்ரிஷா, மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்திருக்கிறார். இதையடுத்து அவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 /7

41 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் த்ரிஷா, மறைமுக அர்த்தத்துடன் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். 

7 /7

தலையில் ஒருவர் பூ வைப்பது போலவும், கையில் மோதிரம் மூக்கில் மூக்குத்தி என மணப்பெண் போன்ற தோற்றத்தில் இருக்கிறார் த்ரிஷா. கூடவே கேப்ஷனில் “காதல் எப்போதும் வெல்லும்” (Love Always Wins) என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த சிலர், த்ரிஷாவுக்கு திருமணமா என கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர். ஒரு சிலர், இது ஏதேனும் படத்துக்கான ப்ரமோஷனாக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.