"இளையராஜா வீட்டுக்கு மருமகளா போக வேண்டியது".. யாரை காதலித்தார் வனிதா?

Written ByR Balaji
Published: Jul 17, 2025, 05:34 PM IST|Updated: Jul 17, 2025, 09:20 PM IST

வனிதா விஜயகுமார், இளையராஜாவின் விட்டிற்கு மருமகளாக போகவேண்டியது என கூறியுள்ளதுதான் தற்போது அனைவராலும் பேசும்பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், வனிதா விஜயகுமார் அப்படி கூறியதற்கு என்ன காரணம் என்பதை இங்கு பார்க்கலாம். 

1/6

வனிதா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படத்தில் ராபர்ட் மாஸ்டர் நாயகனாகவும் வனிதாவே நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. 

2/6

இச்சூழலில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சிவராத்திரி பாடலுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய வனிதா விஜயகுமார், நான் இளையராஜாவின் விட்டிற்கு மருமகளாக போகவேண்டியது என்றும், அவரது மனைவி ஜீவா வீட்டு நகைகள் அறை சாவியை என்னிடம் கொடுத்து  சாமிக்கு பூஜை செய்ய சொன்னார் என கூறினார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

3/6

இந்த நிலையில், இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில், பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேசி இருக்கிறார். இளையராஜா வீட்டிற்கு மருமகளாக போயிருக்க வேண்டியது என வனிதா கூறிவது, கார்த்திக் ராஜாவை நினைத்து இப்படி சொல்கிறாரா அல்லது வேறு யாரையும் மனதில் வைத்து சொல்கிறாரா என்று தெரியவில்லை.

 

4/6

இளையராஜாவின் மனைவி ஜீவா இருக்கும்போது, அவர் வருடாவருடம் வீட்டில்கொலு வைப்பது வழக்கம் அந்த விழாவிற்கு அவர் அழைப்பு விடுவார். அப்போது 2, 3 முறை வனிதா சென்றதுபோல தெரிகிறது. அப்போது இளையராஜா மனைவி ஜீவா சாவி கொடுத்து நகையை பீரோவில் வைக்க சொல்லி இருக்கிறார் என அவர் கூறினார். 

5/6

தொடர்ந்து பேசிய அவர், நடிகை மஞ்சுளாவின் மகள் என்பதால், அவர் அந்த அபிமானத்தில் கூறி இருக்கலாம். ஜீவா காட்டிய பாசத்தை வைத்து அவர் அப்படி நினைத்திருக்கலாம். 

6/6

மேலும், வனிதா இவ்வாறு கூறியதற்கு எதிர்தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், பொய் என்றும் கூற முடியாது என பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறினார்.