Tamilaga Vetrri Kazhagam Vijay: விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யவும், குறைபாடுகளை களையவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
1/6தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு, அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
2/6த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசால் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் 24 மணி நேரமும் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
3/6இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்குள், மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அருண் (24) என்ற இளைஞர், 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மீறி அத்துமீறி நுழைந்தார். இது விஜய் வீட்டில் உள்ள பாதுகாப்பு குளறுபடியை அம்பலப்படுத்தியது.
4/6கடந்த செப்டம்பர் 27 அன்று, கரூரில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதே கூட்டத்தில், விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக ஒரு வீடியோவும் வெளியானது. இந்த சம்பவமும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியது.
5/6இவ்வாறு தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் குளறுபடிகள் நீடிப்பதால், மத்திய உள்துறை அமைச்சகம் இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. விஜயின் பாதுகாப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.ஆர்.பி.எப். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் சென்னைக்கு வந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சி.ஆர்.பி.எப். வீரர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தியுள்ளனர்
6/6இந்த அடுத்தடுத்த சம்பவங்களால், விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யவும், குறைபாடுகளைக் களையவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.