Free Places To Celebrate Holi Festival In Chennai : கலர்ஃபுல்லான ஹோலி பண்டிகையை சென்னையிலும் சிலர் கொண்டாடுவர். இந்த பண்டியை இலவசமாக கொண்டாட சென்னையில் எங்கு செல்லலாம்? இதோ விவரம்!
Free Places To Celebrate Holi Festival In Chennai : இந்தியாவின் வண்ணமையான பண்டிகைகளுள் ஒன்று, ஹோலி. இந்த பண்டிகையை வட இந்தியாவில் பெரும்பாலானோர் கொண்டாடுவர். சென்னையிலும், சிலர் மகிழ்ச்சியாக வண்ணங்களை தூவி கொண்டாடுவர். சென்னையிலும், ஹோலி பண்டிகையை கொண்டாட இதற்கென்று தனியாக பார்டிக்கள் ஏற்பாடு செய்யப்படும். ஆனால், அவற்றிற்கு டிக்கெட் புக் செய்து காசு கொடுத்து போகும்படி இருக்கும். ஆனால், சில இடங்களில் நாம் இலவசமாக கூட ஹோலி பண்டிகையை கொண்டாடலாம். அவை என்னென்ன இடங்கள் தெரியுமா?
ஹோலி பண்டிகை குறித்து தமிழ்நாட்டில் நம்மில் பலர் பெரிதாக அறிந்திருக்க மாட்டோம். ஆனால், வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் இதுவும் ஒன்று. இந்த பண்டிகையில், பலர் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி கலர்களை தூவி உற்சாக பானம் அருந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
பனி காலத்திற்கு பின் வரும் வெயில் காலத்தை வரவேற்கும் வகையில், இந்த பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நாளில், அனைவரும் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் இன்றி மகிழ்ச்சியாக கலர் பொடிகளை தூவி ஹோலி கொண்டாடுவர்.
இந்த ஹோலி பண்டிகையின் முதல் நாளில், ஹோலிகா என்ற நிகழ்ச்சி நடைபெறுமாம். அன்று, இரவு 8 மணிக்கு மேல் பண்டிகையை கொண்டாடுபவர்கள் மரக்கட்டைகளை எரித்து, அக்னி பகவானுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து பூஜை செய்வார்களாம்.
ஹோலி பண்டிகை, என்னதான் வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தாலும், இதனை சென்னை போன்ற நகரங்களில் வாழ்பவர்களும் கொண்டாட விரும்புகின்றனர். இவர்களுக்காகவே சில இடங்களில் ஹோலி பண்டிகைக்கான கொண்டாட்ட பார்ட்டிக்கள் நடைபெறும். அதில் ஒரு சில, விலை குறைவாகவும் இருக்கும். ஒரு சில இடங்களில் விலை அதிகமாகவும் இருக்கும்.
வட இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்றால் நாம் ஹோலி கொண்டாடலாம். குறிப்பாக சவுகார்பேட்டை, கீழ்பாக்கம், வெப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய இடங்களுக்கு நாளை சென்றால் ஹோலி கொண்டாடலாம்.
ஹோலி பண்டிகையை கொண்டாட பெரும்பாலும் இளம் வயதினரே விரும்புகின்றனர். இந்த இடங்கள் அவர்களுக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கலாம்.
ஹோலி பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள், எளிதில் கறை போகும் பொடிகளை பயன்படுத்தவும். கூடவே, உங்கள் உடைமைகளை ஒரு பையில் போட்டு பத்திரமாக அதை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள்.