Guru Peyarchi Palangal 2025: பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, திங்கட்கிழமை கொண்டாடப்படும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகைகக்கு 2 நாட்களுக்கு முன்னதாக, குரு தனது ராசியை கடக ராசித்தில் மாற்றுவார்.
ஜோதிடத்தின் படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு கிரகம் கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார், அதனுடன், குரு கடக ராசிக்குள் நுழைந்து ஹன்ஸ் மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கப் போகிறார்.
1/9அக்டோபர் 18 ஆம் தேதி கடகத்தில் குரு பெயர்ச்சி அடைவது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
2/9மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி நன்றாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும். உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய திசையில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்திற்கு நல்ல நேரம். பழைய நண்பரை சந்திக்கலாம். பணியிடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும், நிலுவையில் உள்ள பணத்தைப் பெறுவீர்கள்.
3/9மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி நல்ல சுப பலனைத் தரும். வணிகம் தொடர்பான உங்கள் நிதி நெருக்கடி தீரும். சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். மரியாதை அதிகரிக்கும், உங்கள் மேலதிகாரிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
4/9சிம்மம்: குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியைப் பெறுவீர்கள். கலையில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக் இருக்கும். சில நல்ல செய்திகளை பெறலாம்.
5/9கன்னி: குரு பகவான் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு பொன்னான நேரம் தொடங்கும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
6/9துலாம்: கடக ராசியில் குரு பகவான் பெயர்ச்சி அடையப் போவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை இடத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுவார்கள். வருமானத்தில் அதிகரிப்பு காணலாம். புதிய வருவாய் வழிகளும் திறக்கும்.
7/9விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். இந்த நேரம் மாணவர்களுக்கு வெற்றி அதிகரிக்கும். வீடு மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி நுழையும்.
8/9குரு பகவானின் முழுமையான அருளை பெற இந்த மூல மந்திரத்தை கூறவும்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!
9/9பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.