சனி நட்சத்திர பெயர்ச்சி: மகா பொற்காலம், ராஜி ராஜயோகம் இந்த ராசிகளுக்கு

Sani Nakshatra Peyarchi: நீதியின் கடவுளான சனி தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். வரும் ஜூன் மாதம், உத்திரட்டாதியின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சி அடைவார், இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும் என்று பார்ப்போம்.

வருகிற ஜூன் 7 ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைவார். உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி ஆவார். இந்த ராசியின் இரண்டாம் பாத்தத்தில் சனி நுழையப் போவதால், மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1 /8

நீதியின் கடவுளான சனி, தனது சொந்த ராசியான கும்பத்தை விட்டு வெளியேறி மீன ராசிக்குள் நுழைந்துள்ளார், அதேபோல் தற்போது நட்சத்திரத்தையும் சனி மாற்றுகிறார். அந்தவகையில் கடந்த 28 ஏப்ரல் 2025 அன்று காலை 7:52 மணிக்கு சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார், மேலும் இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 2, 2025 வரை பயணிப்பார். இந்த காலகட்டத்தில், பல மாற்றங்கள் ஏற்படக் கூடும். 

2 /8

ஜோதிடத்தின் படி, ஜூன் 7, 2025 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சனிப்பெயர்ச்சி நடக்கும். இது பெரும் நன்மைகளைத் தரும். இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்தப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

3 /8

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளலாம். மூத்த அதிகாரிகளுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கலாம். வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் அல்லது திட்டங்கள் முடிவுக்கு வரும்.

4 /8

கன்னி: கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண நடக்கலாம். கூட்டுத் தொழிலில் பெரிய லாபத்தைப் பெறலாம். சனிதேவரின் அருளால், வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்.

5 /8

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பல துறைகளில் வெற்றியை அடையலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சனியின் அருளால், உங்கள் கடின உழைப்பின் பலனை நீங்கள் நிச்சயமாகப் பெறலாம். 

6 /8

மகரம்: சனியின் நட்சத்திர மாற்றம் மகர ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயபரிசோதனையை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு பெறலாம். முதலீடுகள் மூலம் நன்மைகள் கிடைக்கும், மேலும் குடும்ப வாழ்க்கையில் சமநிலை நிலவும்.

7 /8

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் இந்தப் பெயர்ச்சி மன அமைதியையும் செல்வத்தையும் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூக மரியாதை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.