Chaturgrahi Yoga In Pisces: சதுர்கிரஹி யோகம் என்பது பல வருடங்களுக்குப் பிறகு நிகழும் ஒரு அதிசய யோகம் என்று வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், மகத்தான அருளையும் பெறுவார்கள். இதில் உங்கள் ராசியும் இடம் பெற்றுள்ளதா என்று பாருங்கள்.
Lucky Life Of 3 Zodiac Signs: மார்ச் மாதத்தில் உருவாகும் சதுர்கிரஹி யோகம் மிகவும் சக்திவாய்ந்த யோகமாக உருவாக உள்ளது என்று வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது. மீன ராசியில் நான் கு கிரகங்களின் சங்கமம் உருவாக இருக்கிறது. இதனால் இவர்களுக்கு எதிர்பாராத வெற்றிகள், இலாபம், அதிர்ஷ்டம் கிடைக்கவிருக்கிறது.
மார்ச் 14 ஆம் தேதியில் ஹோலி பண்டிகை வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜ யோகம் உருவாகவுள்ளது(Lakshmi Narayana Raja Yoga).
மீன ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகவுள்ளது(Chaturgrahi Yoga In Pisces). இதில் சந்திரன், ராகு, புதன் மற்றும் சுக்கிரன் உள்ளிட்ட நான்கு கிரகங்கள் இணைந்து சஞ்சரித்து சதுர்கிரஹி யோகத்தை உருவாக்கவிருக்கிறது.
இந்த சங்கமம் உருவாகும்போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட வாழ்க்கையைப் பார்ப்போம்(Lucky Life Of 3 Zodiac Signs).
கும்பம்(Aquarius): இந்த யோகத்தால், உங்களுக்கு நல்ல நேரம் அமையப்போகிறது. வியாபாரம், தொழில் மற்றும் வேலை உள்ளிட்ட அனைத்திலும் நிதி வரவு கிடைக்கும். எதிர்பாராத செல்வங்கள் உங்களைத் தேடி வந்தடையும்.
தனுசு(Sagittarius): குடும்பம் மற்றும் உறவுகளிடமிருந்து ஆறுதல் பெறுவீர்கள். வேலையில் கவனமும், மரியாதையும் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியடையும்.
வெளிநாட்டுப் பயணத்தில் வேலை அல்லது படிப்பு ரீதியாகச் செல்ல வாய்ப்பு வரலாம். நிதி நிலைமை வலுவாகும். வருமான ஆதாரங்கள் உருவாகலாம். வாகனம் அல்லது சொத்து வாங்க முயற்சி எடுப்பீர்கள்.
மீனம்(Pisces): வேலை, வியாபாரம் மற்றும் தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள். வாழ்க்கையில் விரைவான வளர்ச்சி கிடைக்கும். உடல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். திருமண செய்தி நல்ல விதத்தில் கைகூடும் அல்லது நீண்ட நாள் திருமணமாகாதவர்கள் திருமண வாழ்க்கை அற்புதமாக அமையும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.