Have you seen these feel-good movies?: விஜய், அஜித் படம் பார்ப்பது நல்லது தான்… ஆனா, சின்ன சின்ன feel-good படங்களையும் கவனிக்க மறக்காதிங்க!
Have you seen these feel-good movies?: சில சின்ன படங்கள் இருக்கின்றன, அவை உங்கள் மனதை தட்டி கேள்விகளை எழுப்பும். அவை box office-ல் மாஸ் இல்லையென்றாலும், உங்கள் மனதில் permanent mark விட்டுப் போகும்.
அஷோக் செவன், ரித்திகா சிங் இனைந்து நடித்த இந்த படம், காதலையும், நட்பையும் புரிந்து கொள்ளவே எடுத்த படம். உங்க life-ல second chance கிடைத்தா என்ன பண்ணுவிங்க?
ஒரு தந்தை, தனது பெண் குழந்தையை வளர்க்கும் போது, அவளது கனவுகளுக்காக ஏற்பட்ட பிரிவையும், முடிவுகளுக்கு உடன்பட வேண்டிய சூழ்நிலையையும், காதலை ஏற்றுக்கொண்டு முன்னேறும் அவளின் வாழ்க்கைநெறியையும் புரிந்து கொள்வது போன்ற அழகான பயணமாக இந்த படம் அமைந்துள்ளது.
திருமண வாழ்க்கையில் மறக்க முடியாத பழைய காதல் நினைவுகலுடன், ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு There is life after love failure என்பதை நன்றாக எடுத்துக்காட்டும் படம்.
ஒரு பழைய காரை மையமாகக் கொண்டு, வயதான பிறகும் கணவன் ஓட்டும் காரில் மகிழும் மனைவியின் நெஞ்சுக்குள் பதிந்த காதலும், சுற்றி உள்ள மக்களின் பாசமும், நன்றியுணர்வும், சின்ன சின்ன சண்டைகளும் கலந்த அழகான வாழ்க்கை, அனைத்தையும் அழகாகக் காண்பித்த படம்.
குடும்பத்திற்காக வீட்டில் இருந்து பிள்ளைகளை வளர்க்கும் தந்தையின் பரிதாபமும், வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தும் மனைவியின் போராட்டமும் இதற்க்கிடையே நிகழும் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்த குடும்பம் சார்ந்த கதையாகும்.
ஒரு சாதாரண மனிதன் நம்பிக்கைத்துரோகம் செய்யப்பட்டு, அவரது குடும்பம் மெதுவாக சிதறும் நிலையில், அதை மீண்டும் ஒன்றிணைக்கும் வரை அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களும் வலிகளும் கூறப்படும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையாகும்.
ஒரு சிறுமிக்குழந்தை போல் நடந்து கொள்ளும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை (ஸ்ரீதேவி) காப்பாற்றும் ஒரு ஆசிரியரின் (கமல்ஹாசன்) காதல், பராமரிப்பு மற்றும் புண்பட்ட பாசத்தின் கதை. அவளது மனநிலை மீளும் தருணம், அவனை மறந்துவிடுகிறாள். அந்த climax scene தமிழ் சினிமாவின் எவர்கிரீன் கண்கலங்கவைக்கும் தருணங்களில் ஒன்றாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.