வெளிநாடுகளிலும் கோடி கோடியாக அள்ளும் 'குட் பேட் அக்லி'.. எவ்வளவு வசூல் தெரியுமா?

Written ByR Balaji
Published: Apr 22, 2025, 09:43 PM IST|Updated: Apr 22, 2025, 09:43 PM IST

நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி கடந்த 10 ஆம் தேதி வெளியானது. 

குட் பேட் அக்லி அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையை செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை செய்து வருகிறது. 

1/6

தமிழின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் 63வது திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

2/6

அஜித், த்ரிஷா, பிரியா வாரியர், பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், யோகி பாபு, ரகுராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

3/6

அஜித்குமாருக்கு இந்த ஆண்டு அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி வெளியான நிலையில், ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. விடாமுயற்சி சரியாக போகாததால், குட் பேட் அக்லி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி குட் பேட் அக்லியும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. 

4/6

இப்படம் ஓடிடியில் வெளியாவதற்கும் தயாராகி உள்ளது. வரும் மே 9 அல்லது 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது. 

5/6

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் 244 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதேபோல் மலேசியாவில் இதுவரை 6 மில்லியன் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

6/6

இதன் மூலம் குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதாக அஜித் ரசிகர்கள் ஆராவாரம் செய்து வருகின்றனர்.