சென்னையில் ரேசன் அட்டை இருக்கா? செப்டம்பரில் இந்த 4 நாள்கள் ரொம்ப முக்கியம் - மிஸ் பண்ணாதீங்க!

Written BySudharsan G
Published: Sep 10, 2025, 07:04 PM IST|Updated: Sep 10, 2025, 07:04 PM IST

Chennai Latest News Updates: சென்னையில் உள்ள ரேசன் அட்டைத்தாரர்கள் செப்டம்பரில் இந்த 4 நாள்களை நோட் செய்து வைக்க வேண்டும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

சென்னையில் குறைதீர் கூட்டம் மற்றும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருள்கள் வீடுகளுக்கே சென்று விநியோகமும் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

ரேசன் அட்டை செய்திகள்1/8

ரேசன் அட்டை செய்திகள்

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

 

ரேசன் அட்டை செய்திகள்2/8

ரேசன் அட்டை செய்திகள்

அதன்படி, நடப்பு செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் செப்.13 (சனி) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

 

ரேசன் அட்டை செய்திகள்3/8

ரேசன் அட்டை செய்திகள்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். 

 

ரேசன் அட்டை செய்திகள்4/8

ரேசன் அட்டை செய்திகள்

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

ரேசன் அட்டை செய்திகள்5/8

ரேசன் அட்டை செய்திகள்

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்ட பொருட்கள் சென்னை மாநகராட்சியில் உள்ள பல மண்டலங்களில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.  

 

ரேசன் அட்டை செய்திகள்6/8

ரேசன் அட்டை செய்திகள்

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று, தாயுமானவர் திட்டத்தின்கீழ் செப். 13 முதல் செப். 16 வரை பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

 

ரேசன் அட்டை செய்திகள்7/8

ரேசன் அட்டை செய்திகள்

மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் வரும் செப். 13 முதல் செப். 15 வரை பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ரேசன் அட்டை செய்திகள்8/8

ரேசன் அட்டை செய்திகள்

திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர்,  அண்ணா நகர், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் வரும் செப். 13 முதல் செப். 16 வரை ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.