அல்லு அர்ஜுன் X அட்லீ படத்தில் 3 நாயகிகள்! யார் யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Oct 27, 2025, 08:09 PM IST|Updated: Oct 27, 2025, 08:09 PM IST

AA22 Movie Actress On Board : அல்லு அர்ஜுன் - அட்லீ இணையும் படத்தில் புதிதாக சில கதாநாயகிகள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். 

AA22 Movie Actress On Board : அல்லு அர்ஜுனும் அட்லீயும் இணையும் படம் ஒன்று, தற்போது தயாராகி வருகிறது. இதில், மூன்று பிரபல நடிகைகள் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர், ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் நடித்தவர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.

AA221/7

AA22

அல்லு அர்ஜுனின் 22வது படத்தை அட்லீ இயக்குகிறார். இது, அட்லீயின் 6வது படமாகும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Sun Pictures2/7

சன் பிக்சர்ஸ்

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம், பான் இந்திய அளவில் உருவாகி வருகிறது.

Allu Arjun3/7

அல்லு அர்ஜுன்

ஏற்கனவே புஷ்பா திரைப்படம் மூலம் இந்திய அளவில் ஹிட் நாயகனாக மாறிய அல்லு அர்ஜுன், இதன் மூலம் இன்னும் பெரிய நாயகனாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 Actress4/7

3 நாயகிகள்

அல்லு அர்ஜுன் - அட்லீ படத்தில், 3 நாயகிகள் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், தீபிகா படுகோன்தான் நாயகி என்பது முன்கூட்டியே தெரியும். இவர் அல்லாமல் மிருணாள் தாகூர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பூஜா ஹெக்டே, ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் வைகுண்டபுரம் படத்தில் நடித்திருக்கிறார்.

Mrunal Thakur5/7

மிருணாள் தாகூர்

இந்த படம், எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்தை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்று கூறப்படுகிறது. இதில், தீபிகா, பேரலல் யுனிவர்சில் இருந்து வந்த போராளியாக நடிப்பதாகவும், மிருணாள் தாகூர், கரண்ட் உலகில் இருக்கும் நாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு பாடலுக்கு மட்டும் பூஜா நடனம் ஆடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Deepika Padukone6/7

தீபிகா படுகோன்

தீபிகா, இந்த படத்தில் நாயகியாக இருப்பது நிச்சயம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பிற முக்கிய கதாப்பாத்திரங்களாக இவர் இருக்கலாம் என்று சினிமா ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Not Finalised7/7

முடிவாகவில்லை

இந்த படத்தில் தீபிகா-அல்லு அர்ஜுனை தவிர யாரெல்லாம் நடிக்கின்றனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.