வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை அலட்சியமாக நினைக்காதீங்க

Ridge Gourd Benefits பீர்க்கங்காய், மிகச் சிறந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று என கூற இயலாது. நான் ஒதுக்க கூடிய காய்கறிகள் பலவற்றில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்வது நல்லது.

பெரும்பாலான வீடுகளில், பீர்க்கங்காயை அடிக்கடி சமைக்கும் பழக்கம் இருப்பதில்லை. உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, பீர்க்கங்காயை ஒதுக்காமல் இருந்தால், உடல் எடையை கட்டுப்படுத்துவது முதல், சுகர் லெவலில் கட்டுக்குள் வைப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளை அடையலாம்.

1 /8

பீர்க்கங்காயில், புரதச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், தயாமின், வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், மெக்னீசியம், ரிபோபிளேவின், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன.

2 /8

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பீர்க்கங்காய் ஒரு வரப் பிரசாதம். இதில் எண்ணற்ற நார்ச்சத்து நிரம்பியுள்ளது. நீர் சத்துக்கும் குறைவில்லை. இந்த இரண்டுமே உடல் எடை குறைய அவசியம். இதனால் கொழுப்பை எரித்து சிக்கன் வகை பெறலாம்.

3 /8

முதுமை அண்டாமல் இருக்கவும், இளமையை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பீர்க்கங்காயில் நிறைந்துள்ளன. இவை சரும திசுக்களுக்கு புத்துயிர் கொடுத்து, நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

4 /8

பீர்க்கங்காய் நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த உணவாக இருக்கும். இதில் உள்ள ஹைபோ கிளைசிமிக் பண்புகள், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தும். மேலும் இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரிகள் இவற்றை நீரழிவு நோய்க்கான அருமருந்தாக இருக்க உதவுகின்றன.

5 /8

கண் பார்வை கூர்மைக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து, பீர்க்கங்காயில் நிறைந்துள்ளன. பார்வை திறன் சிறப்பாக இருக்கவும், கண் தொடர்பான குறைபாடுகளை தவிர்க்கவும் பீர்க்கங்காய் உதவும்.

6 /8

பீர்க்கங்காய் உடலில் உள்ள வீக்கத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கங்களை சரி செய்து, இருமல் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்கிறது. இதனால் நுரையீரல் வலுப்பெற உதவுகிறது.

7 /8

சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றைப் போக்கி, இளமையான தெளிவான, பளபளப்பான சருமம் பெற உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்குவதால், சருமத்திற்கு பளபளப்பு கூடுகிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.