Amazing Insurance Plan For Middle Class : இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து அனைவருமே தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு இது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
Amazing Insurance Plan For Middle Class : சேமிப்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதிலும், குறைவான அல்லது நடுத்தர வர்க்கத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டங்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்ந்தெடுப்பர். அப்படிப்பட்ட திட்டம் ஒன்று குறித்து இங்கு பார்ப்போம்.
LIC-ல் (Life Insurance Corporation) இருக்கும் LIC Micro Bachat திட்டம்தான், இந்த இன்சூரன்ஸ் திட்டம். இது, சிறந்த மற்றும் பாதுகாபான திட்டமாக இருக்கிறது. இது, குறைந்த வருமானம் வாங்கும் மக்களுக்கு ஏற்ற திட்டமாகவும் அமைந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, 18 முதல் 55 வரை வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை.
இந்த திட்டத்தின் படி, ப்ரீமியம் தொகை செலுத்தும் நபர், 3 ஆண்டுகளுக்கு தவறாமல் ப்ரீமியம் செலுத்தினால் ஆறு மாதங்களுக்கு ப்ரிமியம் செலுத்தாமல் இருப்பதற்கான சலுகை வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்தினால், அவருக்கு 3 ஆண்டுகளுக்கான ப்ரீமியம் தொகை கிடைக்கும்.
LIC Micro Insurance திட்டத்தின் படி, ஒரு நபருக்கு 50,000 முதல் 2,00,000 வரை இன்சூரன்ஸ் கிடைக்கும். ஒருவர் 3 வருட காலத்திற்கு பிரீமியம் தொகையை செலுத்தினால், அவருக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த மைக்ரோ இன்சூரன்ஸில், ஒருவர் 10-15 வருடத்திற்கான திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இதை பொறுத்தவரை மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டில் ப்ரீமியம் தொகையை செலுத்தலாம்.
இந்த திட்டத்தின் கீழ், 18 வயதாகும் ஒரு நபர் 15 ஆண்டுகால திட்டத்தில், ரூ.1000-க்கு ரூ.51.50 தர வேண்டும். ஆனால், 35 வயதான நபர் இதே 15 ஆண்டுகால திட்டத்தை தேர்ந்தெடுத்தால், ஒரு ஆயிரத்திற்கு ரூ.52.20 வரை செலுத்த வேண்டும்.
இதன்படி, 35 வயதுடைய ஒருவர் 15 வருட காப்பீட்டுக் கொள்கையை ரூ.1 லட்சம் காப்பீட்டுடன் எடுத்துக்கொண்டால், அவரது வருடாந்திர பிரீமியம் ரூ.5116 ஆக இருக்கும். இந்த திட்டம் புரியவில்லை அல்லது விருப்பமில்லை என்றால், இந்த பாலிசியை எடுத்த 15 நாட்களுக்குள் இந்த காப்பீட்டுத் திட்டத்தை வேண்டாம் என்று முடிவு Surrender செய்து விடலாம்.