Sunita Williams Before After Stuck In Space For 9 Months Photos : அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கியிருந்தார். அவர், இன்று (மார்ச் 18) பூமிக்கு திரும்புகிறார். இதையொட்டி அவர் 9 மாதங்களுக்கு முன்பு எப்படியிருந்தார் என்பது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sunita Williams Before After Stuck In Space For 9 Months Photos : கடந்த சில மாதங்களாகவே, நாம் வாழும் உலகிலும், உலகை தாண்டி இருக்கும் இடத்திலும் நிகழும் சில விஷயங்கள் நம்மை அதிர்ச்சுக்குள்ளாக்கியது. அதில் ஒரு பிரச்சனை, சுனிதா வில்லியம்ஸும் அவருடன் சென்ற புட்ச் வில்மோரும் விண்வெளியில் சிக்கியது. 9 நாள் மிஷினில் சென்ற இவர்கள், இயந்திர கோளாறு காரணமாக விண்வெளியிலேயே சிக்கிக்கொண்டனர். இதனால், அவர்களால் 9 மாதங்களுக்கு பூமி திரும்ப முடியவில்லை. இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் அவர்கள் இன்று பூமியை நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், சுனிதா 9 மாதங்களுக்கு முன்பு பார்க்க எப்படியிருந்தார் என்பது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக மக்களை கடந்த சில மாதங்களில் அதிர வைத்த சம்பவங்களுள் ஒன்று, சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டது.
59 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்கராக இருந்தாலும், அவர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற தாய்-தந்தைக்கு பிறந்தவர் என்பதால் இந்தியர்கள் இவரை நம் நாட்டு பெண்ணாகவே பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற இவர், 8 நாள் மிஷினாக ஸ்பேஸிற்கு சென்றிருந்தார். ஆனால், அங்கு ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவர் புட்ச் வில்மோருடன் விண்வெளியிலேயே 9 மாதங்கள் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 18 ஆம் தேதியான இன்று ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.
சுனிதா பூமிக்கு திரும்புவது, உலக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், 9 மாதங்களுக்கு முன்பு (விண்வெளியில் சிக்கும் முன்) எப்படியிருந்தார் என்பது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
60 வயதை தொட இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், உடல் எடை குறைந்து, முடி நரைத்து, 9 மாதங்களில் மிகவும் தன் வயதை தாண்டிய முதுமை தோற்றத்தை பெற்று விட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் பத்திரமாக பூமி திரும்ப, விண்கலத்தில் இவர்கள் நான்கு நிலைகளை கடக்க வேண்டி உள்ளதுசுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்கள் கழித்து பூமிக்கு விரும்புகிறார்கள். 17 மணி நேர பயணத்திற்குப் பின் புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.