Anti-Ageing Tips: இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கையில், இளமையிலேயே முதுமையான தோற்றம் வந்து விடுகிறது. மோசமான உணவுப் பழக்கம் இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்திற்கும் டயட்டிற்கும் நேரடி சம்பந்தம் உள்ள நிலையில், நிலைமையை காக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும். டயட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
இளமை: என்றென்றும் மார்கண்டையன் போல் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது... 60 பிளஸ் வயதிலும், இளமையாக இருக்க, டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காய்: வியக்கத்தக்க அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், இளமையைக் காக்க உதவும் சிறந்த உணவு.
பாதாம் பருப்பு: உலர் பழங்களில், மிக முக்கியமானதாக இருக்கும் பாதாம் பருப்பில், இளமையை பாதுகாக்க உதவும் வைட்டமின் ஈ, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
கீரை: இரும்புச்சத்து நிறைந்த கீரை, கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ உள்ளிட்ட பிற சத்துக்கள், சருமத்தின் செல்கள் வளர உதவுகிறது.
தக்காளி: சமையலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளியில் உள்ள லைகோபின் சரும செல்களை பாதிக்காமல் தடுக்கும் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்.
மீன் உணவுகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் மிகச்சிறந்த ஆதாரமாக திகழும் மீன் உணவுகள், சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும் சிறந்த உணவு.
மாதுளை: இரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் மாதுளை, சருமத்தை இளமையாக பராமரிக்கவும் மிகவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.