முதுமை அண்டாமல் இருக்க உதவும்.... கொலாஜன் நிறைந்த சில சூப்பர் உணவுகள்

Anti-Aging Tips: வயதானாலும், என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கும். அழகிய சுருக்கமில்லாத மாசு மருவற்ற சருமமும், பளபளப்பான அடர்ந்த கருமையான கூந்தலும், இளமையை பறைசாற்றும் முக்கிய அம்சங்கள்.

இளமையை பாதுகாத்துக் கொள்ள, நமது உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மமுதுமையை விரட்டி அடிப்பதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. இளமையை தக்க வைத்துக்கொள்ள, கொலாஜன் என்ற இயற்கை புரதம் அவசியம்.

1 /11

சருமம், கூந்தல், நகங்கள், மூட்டுகள் ஆகியவையை ஆரோக்கியமாக இருக்க, கொலாஜன் என்ற புரதம் மிக அவசியம். உடலில் கொலாசனின் உற்பத்தி குறையும் போது, சருமம் தளர்ந்து, சுருக்கங்கள் தோன்றி, பளபளப்பை இழக்கிறது. முடி வலுவிழந்து, நரைமுடி, முடி உதிர்தல் வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.  

2 /11

இளமையைக் காக்க தேவையான முக்கிய ஊட்டச் சத்தான கொலாஜன் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வதால், முதுமையை விரட்டி அடிக்கலாம். சரும சுருக்கங்களைப் போக்கி, மென்மையான பளபளப்பான சருமத்தை பெறவும், அழகான தலை முடியை பெறவும் தேவையான , கொலாஜன் ஊட்டச்சத்து நிறைந்த சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

3 /11

சுமார் நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. மேலும் இவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை தூண்டி இளமையை காத்துக் கொள்ள உதவுகிறது.  

4 /11

குடைமிளகாய், குறிப்பாக மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாயில், வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதன் மூலம், கொலாஜன் இலைகளை வலுப்படுத்துகிறது.

5 /11

எலும்பு சூப் கொலாஜன் உற்பத்தியை தூண்டி இளமையாக வைத்திருக்கும் சிறந்த உணவுகளில் ஒன்று. இது கோழி, ஆடு மாட்டு எலும்புகளை கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகை ஆகும். இதில் நிறைந்துள்ள கிளைசின், புரோலின் மற்றும் ஹைட்ராக்சிப்ரோலின் போன்ற அமினோ அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன.

6 /11

முட்டையில் உள்ள புரொலின் மற்றும் லைசின் என்னும் அமினோ அமிலங்கள், கொலாஜன் உற்பத்தியை தூண்டி இளமையைக் காக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள சல்ஃபர் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான பயோடின் உற்பத்தியை தூண்டுகிறது.

7 /11

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதுடன், கொலாஜன் இழைகளை வலுப்படுத்துவதன் மூலம், சருமத்தை இறுக்கமாகவும், மென்மையாகவும் பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஃப்ரீ ராடிக்கல்களால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை தடுக்கிறது.

8 /11

மீன் குறிப்பாக கடல் மீன் வகைகளில், கொலாஜன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை சருமம் மற்றும் கூந்தலை பாதுகாக்கும் அருமருந்துகள்.  

9 /11

பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு, சியா விதைகள், ஆளி விதைகள் ஆகியவற்றில் கொழுப்பு அமிலங்களும் புரதங்களும் நிறைந்துள்ளன. இவை கொலாஜன் பூஸ்டர்களாக செயல்பட்டு, சருமத்தை இறுக்கமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

10 /11

பூண்டில் உள்ள சல்பர் மற்றும் டாரைன், கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும் பெரிய அளவில் உதவுகிறது.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.