Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு எந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்? என தெரிந்து கொள்ளுங்கள்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் எந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1/11கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் புதிய விண்ணப்பங்களைக் கொடுக்கலாம். இந்த திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தகுதியுள்ள பெண்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
2/11அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உட்பட இன்னபிற அரசின் சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
3/11குறிப்பாக நகரப் பகுதிகளில் 3,768 இடங்களிலும், ஊரகப்பகுதிகளில் 6,232 இடங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே மக்கள் தங்கள் அருகாமையில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தையும் கொடுக்கலாம்.
4/11இதுதவிர அரசிடமிருந்து வேறு சேவைகள் வேண்டும் என்றாலும் இந்த முகாமில் விண்ணப்பிக்க முடியும். எனவே, இது குறித்தும் உங்கள் ஊராட்சி அலுவலர்களை சந்தித்து விளக்கம் பெற்று மனு கொடுக்கவும்.
5/11நவம்பர் 30 ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனு அளிப்பதற்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்கிறது. போதுமான காலவகாசம் அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது
6/11எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு விண்ணப்பிக்க இது நல்ல வாய்ப்பு. இதனை தவறவிட வேண்டாம். ஏனென்றால் இதன்பிறகு மீண்டும் ஒருமுறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க இந்த ஆட்சியில் வாய்ப்பு கிடைக்காது.
7/11ஏனென்றால் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் நவம்பர் வரை விண்ணபிப்பவர்களின் மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அந்த மனுக்கள் பரிசீலனை முடிந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தகுதியான பயனாளிகளுக்கு விடுவிக்கப்படும்.
8/11இதற்கு முன்பே இன்னொரு குட் நியூஸ் இருக்கிறது. அது என்னவென்றால், ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை விடுவிக்கப்பட உள்ளது.
9/11ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் புதிய பயனாளிக்குக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முதல் கட்ட விரிவாக்கம் தொடர்பான அரசு அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
10/11முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு விழாவாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் இருக்கும். இப்போது, முதல் கட்ட விரிவாக்கத்துக்கான பயனாளிகளை இறுதி செய்யும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை மாதத்துக்குப் பிறகு எந்த தேதியிலும் இதுதொடர்பான குட் நியூஸ் வெளியாகலாம்.
11/11நீண்ட நாட்களாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து எந்த பதிலும் வராமல் இருக்கிறதே என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.