Night Acne Treatment; முகத்தில் அடிக்கடி தோன்றும் வெண்மை பருக்கள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை மிகுந்த அதிருப்திக்குள்ளாக்கும். இதில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள், இயற்கையாகவே அவற்றை சமாளிக்க உதவும்.
Home Remedy For Acne: இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பொதுவாக ஏற்படும் பருக்குப் பிரச்சனை, முக அழகையே பாதிக்கக்கூடியதாக அமைகிறது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் தோன்றும் பருக்கள் வலி மற்றும் கோளாறுகளை ஏற்படுத்தும். இயற்கையாகவே இவற்றைத் துடைக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேம்பு பேஸ்ட்(Neem paste); வேம்பில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணங்கள் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பருக்கள் குறைய உதவுகிறது. வேம்பை அரைத்த பேஸ்டை இரவில் தடவி 20 நிமிடங்கள் வைத்த பிறகு கழுவவும்.
கற்றாழை ஜெல்(Aloe vera gel): கற்றாழை முகச்சோர்வை நீக்கி, தோல் சீராக அமைந்துவிட உதவுகிறது. சுத்தமான கற்றாழை ஜெல்லை நேராக பருக்கள் மீது தடவவும்.
மஞ்சள் பேஸ்ட்(Turmeric paste): மஞ்சளில் உள்ள குர்குமின், பாக்டீரியாக்களை அழிக்கிறது. சிறிது மஞ்சளில் தேன் அல்லது பாலை கலந்து முகத்தில் தடவலாம்.
பேக்கிங் சோடா பேஸ்ட்(Baking soda paste): பேக்கிங் சோடா தோல் சீராக்கும் தன்மை கொண்டது. சிறிது நீருடன் கலந்து தடவினால், பருக்களைக் குறைக்க உதவுகிறது. ஆனால் வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
துளசி பேஸ்ட்(Tulsi paste): துளசி இலைகளை அரைத்து பேஸ்டாக செய்து பருக்கள் மீது தடவினால், அதிலுள்ள ஆன்டி-இன்ஃபிளமேட்டரி தன்மை வேகமாக பருக்களை கட்டுப்படுத்தும்.
பூண்டு விழுது(Garlic paste): பூண்டில் உள்ள அலிசின் (allicin) என்பது பருக்கள் எதிரான சக்தி வாய்ந்த பொருள். சிறிது பூண்டு விழுதை நேரடியாக பருக்களில் தடவலாம். ஆனால் மிதமான அளவில் மட்டும்.
இலவங்கப்பட்டை பேஸ்ட்(Cinnamon paste): இலவங்கப்பட்டையில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை முகத்தில் பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். இதை அரைத்து தேனுடன் சேர்த்து தடவலாம்.
புதினா பேஸ்ட்(Mint paste): புதினாவில் உள்ள மெந்தால் தோலை குளிர்விக்கிறது. இது பருக்கள் குறைய உதவுகிறது. புதினாவை அரைத்து முகத்தில் 15 நிமிடங்கள் வைத்து கழுவுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் தீக்ஷாவின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)