Relationship Tips: திருமணத்திற்கு பின்னரும் உங்களது முன்னாள் காதலன்/காதலியின் ஞாபகம் உங்களுக்கு வந்துகொண்டே இருந்தால் இந்த 4 விஷயங்களை செய்தால் உங்கள் பார்ட்னருடன் நிம்மதியான வாழ்வை மேற்கொள்ளலாம்.
முன்னாள் காதலன்/காதலியின் நினைவுகளில் இருந்து முழுமையாக வெளிவராமல் பெற்றோர்கள், சமூகத்தின் கட்டாயத்தின் பேரில் சிலர் திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணமான பின்னரும் முன்னாள் காதலன்/காதலியின் நினைவுகளுடன் ஒருவர் இருந்தால் அந்த திருமண உறவே பாழாகிவிடும்.
பல ஆண்டுகளாக காதலித்து சில காரணங்களால் காதலை முறித்துக்கொண்டு, அரை மனதுடன் சிலர் வேறொருவருடன் திருமண வாழ்க்கைக்குள் செல்கின்றனர். பெரும்பாலும் இந்த திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படுபவை.
புதிய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடர வேண்டும் என சிலர் நினைப்பார்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு இந்த காலகட்டத்தில் அவர்களின் முன்னாள் காதலன்/காதலியின் ஞாபகங்கள் வரலாம்.
இது இந்த திருமண வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்திவிடும். பார்ட்னருடன் முழு மனதுடன் உங்களால் சகஜமாக இருக்க முடியாது. முன்னாள் காதலன்/காதலியின் நினைவுகளில் இருந்து நீங்கள் விடுபட இந்த 4 விஷயங்களை செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் உங்கள் திருமண வாழ்வு சிறப்பாகும்.
முதலில் உங்கள் கணவன்/மனைவி உடன் அதிகமாக நேரத்தை செலவிடுங்கள். அப்படி செய்தால் தான் உங்கள் பார்ட்னர் குறித்த புரிதல் அதிகமாகும். உங்கள் பார்ட்னர் குறித்து அறிந்துகொள்ள முயற்சி எடுக்கும்போது அது உங்கள் உறவை பலப்படுத்தும். இது உங்களின் பார்ட்னரையும் சந்தோஷப்படுத்தும்.
சமூக வலைதளங்களில் உங்கள் முன்னாள் காதலன்/காதலியை புறக்கணித்துவிடுங்கள். நண்பர்களாக தொடர்வதும் கூட சிக்கலை ஏற்படுத்தலாம். அவரை பின்தொடர்வதை நிறுத்தலாம் அல்லது பிளாக் கூட செய்யலாம். இதனால் அவர் பதிவிடுவது, அவரது நினைவுகள் உங்களை தொந்தரவு செய்யாது. உங்கள் முன்னாள் காதலன்/காதலியை அடிக்கடி பார்ப்பது உங்களுக்கு அவரது நியாபகத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
உணர்ச்சிகளை கட்டுப்பாடுத்தாதீர்கள். உங்களது உணர்ச்சியை உங்களது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். பேசுவதற்கு யாருமே இல்லை என்ற நிலையில் உங்கள் நிபுணரை கூட சந்தித்து ஆலோசனை பெறலாம்.
அதேபோல், உங்கள் பார்ட்னருடன் உங்களது முன்னாள் காதலன்/காதலியை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அதாவது அவரை ஒப்பிட்டு பார்ப்பது சில ஏமாற்றங்களையும், வலிகளையும் அளிக்கும். உங்களுக்கு மட்டுமில்லை பார்ட்னருக்கும் இது தெரிந்தால் நிச்சயம் மனது கஷ்டப்படும். எனவே உங்களது கணவன்/மனைவியை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்களின் மனதை புரிந்துகொள்ள முயற்சித்து, உங்களது முன்னாள் காதலன்/காதலியுடன் ஒப்பிடாமல் அவர்களின் தனித்தன்மையை ரசித்துக்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் உரிய நிபுணரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.